விஜய் 65 ஹீரோயின்!



South or North பூஜா is the best... என கொண்டாடுகிறது சினி இண்டஸ்ட்ரி. தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன்... இந்தியில் அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங்... என டாப் ஹீரோக்களின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் பூஜா ஹெக்டேதான். டோலிவுட் ‘அலவைகுந்தபுரம்லு’வில் புட்டபொம்மாவாக இளசுகளை கிறங்கடித்த பூஜா, இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும்,
தற்காலிகமாக ‘விஜய் 65’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

‘‘என் படங்கள்ல அல்லு அர்ஜுனோட நடிச்ச ‘அலவைகுந்தபுரம்லு’ ரொம்பவே ஸ்பெஷல். இன்னமும் ‘புட்டபொம்மா’வா ரசிகர்கள் கொண்டாடறாங்க. குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் அந்தப் பாட்டை மட்டுமல்ல, படத்தையும் ரீப்பீட்டடா பார்க்கறாங்க. என் படங்கள்ல அதிகமா மத்த மொழிகளுக்கு டப் ஆன படமும் அதுவாத்தான் இருக்கும்னு நினைக்கறேன். தமிழ்ல கூட ‘வைகுந்தபுரம்’னு சன்ல ஒளிபரப்பாச்சு.

அதோட ஹிட்டுக்குப் பிறகு, என்னோட மத்த படங்களையும் டப் பண்ண விரும்பறாங்க. இப்படி சின்னச் சின்ன சந்தோஷங்கள் அந்த படத்தின் மூலம் கிடைச்சிட்டே இருக்கு...’’ குழந்தைச் சிரிப்பில் குதூகலிக்கிறார் பூஜா.பிரபாஸோட நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ ஷூட் முடிச்சாச்சா?

யெஸ். படம் நல்லா வந்திருக்கு. இந்தி, தெலுங்கு, தமிழ்னு மூணு லாங்குவேஜிலும் படம் வருது. ‘ராதே ஷ்யாம்’ ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேதான் ஷூட் போச்சு. செட்ல எல்லாருமே மாஸ்க் போட்டிருப்போம். ஸ்பாட்ல அடிக்கடி டெம்பரேச்சர் பரிசோதனை பண்ணுவாங்க. கடுமையான விதிமுறைகளோடதான் ஷூட் நடந்துச்சு.

இந்த மாதிரி ஒரு டஃப் சூழல்ல ஷூட்ல இருந்ததை நினைச்சு பெருமைப்படுறேன். செட் ரொம்ப கலகலனு இருக்கும். பிரபாஸ் அவ்ளோ ஃபன் பர்சன். படத்தோட தயாரிப்பாளரும் அவரும் ஃப்ரெண்ட்ஸ். ஸோ, ஃப்ரெண்ட்லியான ஸ்பாட்டா மாறிடும். ரெண்டு பேரும் ஸ்பாட்ல இருந்தாலே, என்னைக் கலாய்ப்பாங்க. உங்க பர்சனல் சீக்ரெட்ஸை சொல்லுங்க..?

நிறைய இருக்கு. நான் நடிகையா ஆகாம இருந்தா, ட்ராவலிங் தொடர்பான வேலைல இருந்திருப்பேன். நிச்சயம் டெஸ்க் ஒர்க் ஜாப்ல இருக்க மாட்டேன். இல்லைனா ஃபேஷன், ஸ்டைலிங்னு கவனம் செலுத்தியிருப்பேன். மும்பைல இருக்கும் என் வீடு ரொம்ப பிடிக்கும். ரிலாக்ஸ் ஸ்பாட்டா பாலித் தீவு பிடிக்கும். டின்னர் விஷயத்தில் நானே சமைச்சு சாப்பிடுறதுல இஷ்டம். அப்படியில்லனா, கேண்டில் லைட் டின்னர் என் சாய்ஸ். எவ்ளோ சாக்லெட்னாலும், வேணாம்னு சொல்ல மாட்டேன்! சீஸ் ரொம்ப ப்ரியம்.
விஜய் - 65..?

வெரி வெரி ஹேப்பி! சன் பிக்சர்ஸ் தயாரிப்பு... விஜய் சார் ஹீரோனா எப்படியிருக்கும்..? வானத்துல பறந்துட்டு இருக்கேன்.இயக்குநர் நெல்சன் கதை சொன்னதுமே படத்தை மிஸ் பண்ணக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துடுவாங்க. அப்படியொரு மாஸ் கதை.படத்துலயும் நான் அழகா தெரிவேன். ஏன்னா, ‘ராதே ஷ்யாம்’ கேமராமேன் மனோஜ் பரமஹம்சா சார்தான், விஜய் - 65க்கும் ஒளிப்பதிவு பண்றார்! ஷூட்டுக்காக I’m waiting!

மை.பாரதிராஜா