திருமணத்துக்குப் பின் காஜல்!சினிமாவில் என்ட்ரி ஆகி ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆண்டை நெருங்கும் காஜல் அகர்வால், இப்போது டோலிவுட்டில் ஃபுல் ஃபார்மில் பளபளக்கிறார். அங்கே விஷ்ணு மஞ்சுவின் ‘மொசக்காலு’ ரிலீஸ் ஆன குஷியுடன் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’வில் ஜொலிஜொலிக்கிறார்.‘பொம்மலாட்டம்’ல இருந்து ‘இந்தியன் 2’ வரை தமிழ்ல ஹீரோயினா ட்ராவல் ஆகுற ஃபீல் எப்படி இருக்கு?

சாதாரண விஷயமா பார்க்கல. ஹீரோயினா தாக்குப்பிடிக்கறது ஈஸி இல்ல. வாழ்க்கையை நம்பமுடியாத ஒரு கட்டுக்கோப்போடும், அதீத அர்ப்பணிப்போடும் வாழணும். சினிமானு இல்ல, எந்தத் துறையா இருந்தாலும் ஒரு லட்சியத்தை அடையணும்னா நிறைய போராட்டங்களை கடந்துதான் வரணும். அப்பதான் நினைச்ச இடத்தை அடைய முடியும்.

இருபது வயசுல இருந்து ஓடிட்டு இருக்கேன். ரெஸ்ட்டே எடுத்ததில்ல. வருஷத்துல ரெண்டே ரெண்டு நாட்கள் ஒர்க் பண்ணாம இருந்தா அதிசயம். தீபாவளி, நியூ இயர் மாதிரி ஏதாவது ஃபெஸ்டிவல் டே வந்தாதான் ஓய்வு. கடுமையான சம்மர், அடைமழை காலம்னு எல்லா சூழல்கள்லயும் ஒர்க் பண்ணியிருக்கேன். ஒருநாள் காலைல ஐரோப்பால கண்விழிப்பேன். இன்னொரு நாள் சென்னை, மறுநாள் ஹைதராபாத்...

ஞாயிறு மாதிரி ஹாலிடேஸ்ல கூட குறைஞ்சது பதினாறு மணி நேரம் உழைச்சிருப்பேன். ஒர்க் பண்றது ரொம்ப பிடிச்ச விஷயம்னால, சலிக்காம ஓடிக்கிட்டே இருந்தேன்.அப்படி மூச்சு விடாம ஓடும்போது, ஒருநாள் நின்னு நிதானமா யோசிச்சுப் பார்த்தேன். நான் போற பாதை சரியானதுனு தோணுச்சு. லட்சியத்தை நோக்கி ஓடும்போது, இந்த உழைப்பு நிச்சயம் தேவை.

இந்த உழைப்பினால ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை நிச்சயம். அதுக்கு நானே உதாரணம். ஒரு நல்ல பாதைல, கிரியேட்டிவ் ஃபீல்டுல நடந்துட்டு இருக்கோம்னு மனசுல ஒரு திருப்தியும் நிறைவும் இருக்கு. மனசுக்கு நிறைவான ஒரு கதாபாத்திரத்துல நடிச்சு, அதுக்கு மக்கள்கிட்ட அமோக வரவேற்பு கிடைக்கும்போது, வாழ்க்கை அர்த்தமுள்ளதா மாறுது. லாக்டவுன்ல ஒரு வருஷம் வீட்ல சும்மா இருக்க வேண்டியதாகிடுச்சு. சினிமாவுல ஒரு வருஷம் பிரேக் எடுத்த மாதிரி நினைச்சுக்கிட்டேன். லாக்டவுனுக்குப் பிறகு மறுபடியும் ஷூட்ல கலந்துக்கிட்டு ரெண்டு படங்கள் நடிச்சு முடிச்சுட்டேன்.

என்ன சொல்றார் சிரஞ்சீவி..?‘கைதி நம்பர் 150’க்குப் பிறகு சிரஞ்சீவி சாரோட நடிக்கறேன். ‘ஆச்சார்யா’ல சின்ன ரோல்தான். ஆனா, சிரஞ்சீவி சார் நடிப்பில், ராம்சரண் தயாரிக்கும் படம் என்பதால் நடிச்சிருக்கேன். அந்தப் படம் நிச்சயம் மெகா ஹிட் அடிக்கும்.  எப்படிப் போகுது மேரேஜ் லைஃப்?ஹேப்பியா..! கணவர் கௌதம் கிச்லு என்னை நல்லா பாத்துக்கறார். பத்து வருஷ நண்பர். லாக்டவுனுக்கு, மேரேஜுக்கு முன்னாடி வரை நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். லாக்டவுன் எல்லாத்தையும் மாத்திடுச்சு. ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காம இருக்க முடியல. அப்பதான் அது லவ்னு தெரிஞ்சுது.

அப்புறம் அம்மாகிட்ட, நான் காதல்ல விழுந்த விஷயத்தைப் பத்தி சொன்னேன். அப்பாவை கன்வின்ஸ் பண்ணினோம். ஏற்கெனவே நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். ஸோ, மேரேஜ் ஈஸியாகிடுச்சு. கௌதம் நான் நடிச்ச  பாலிவுட், டோலிவுட் ஹிட் மூவீஸ் எல்லாத்தையும் பார்த்திருக்கார். நான் ஆக்ட்டிங்லஇருக்கறதை பெருமையா நினைக்கறார்!  

மை.பாரதிராஜா