30 ஆயிரம் வடை சுட்ட டிரம்ப்!



அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், தன் பதவிக்காலத்தில் தெரிவித்த பொய்களின் எண்ணிக்கை 30573.

‘வாஷிங்டன் போஸ்ட்’ ஃபேக்ட் செக்கர் குழு அவர் சொன்ன பொய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிபராக பதவியேற்றது முதல் 100 நாட்களில் 492 பொய்களை டிரம்ப் பதிவு செய்துள்ளார். மொத்த பதவிக் காலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 21 பொய்கள் கூறியுள்ளார்.அதிபர் பதவியிலி ருந்த முதல் ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 தவறான தகவல்களைத் தெரி வித்த அவர், இரண்டாவது ஆண்டில் 16, மூன்றாவது ஆண்டில் 22, இறுதி ஆண்டில் 39 என தொடர்ந்து தன் பொய்களை அதிகப்படுத்தி உள்ளார்.

அவர் தெரிவித்த தவறான தகவல்களில் பெரும்பாலானவற்றை, நீக்கம் செய்யப்பட்ட அவரது டுவிட்டர் கணக்கு வாயிலாகவே தெரிவித்துள்ளார்.  கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில், அமெரிக்காவின் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு தான்தான் காரணம் என டிரம்ப் 6 ஆயிரத்துக்கும் அதிகமான முறை தெரிவித்துள்ளார். குறிப்பாக தேர்தல் நெருங்கிய கடைசி 5 மாதங்களில் டிரம்ப் தெரிவித்த பொய்யான தகவல்களின் எண்ணிக்கை மட்டும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இன்னும் இதுபோல் யாரும் Fact Check செய்யவில்லை!

காம்ஸ் பாப்பா