ஜோ பைடன் கற்றுத் தரும் பாடம்!
அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடனின் வயது 78. அதிபர்களிலேயே வயதானவர் இவர்தான். கிறிஸ்துமஸ் மரம் வாங்கச் சென்றபோது இவரது மனைவி யும் மகளும் கார் விபத்தில் இறந்தனர். ஒரு மகன் மூளைப் புற்றுநோயால் இறந்தார். கோகேய்ன் போதை மருந்து காரணமாக இரண்டாவது மகன் அமெரிக்க கடற்படையில் இருந்து நீக்கப்பட்டார்.
பைடனுக்கு 20 வயதில் முகத் தசைகள் முடக்கம் எற்பட்டு பேச சிரமப்பட்டார். - இத்தனை சோதனையான வாழ்க்கைச் சூழ்நிலைகள் இருந்தபோதிலும், தன் 78 வயதில் உலகின் சக்தி வாய்ந்த நாட்டின் அதிபராகி உள்ளார்.இது உலகின் மூத்த குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பாடம். 50 - 60 வயதிலேயே எல்லாம் முடிந்துவிட்டது என சோர்வுடன் முடங்கும் அனைவரும் ஜோ பைடனை தங்கள் ரோல் மாடலாகக் கொள்ளலாம்.
அனைத்துப் பிரச்னைகளையும் சந்தித்த பிறகும் இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்க உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை தகுதியுள்ளவராக மாற்றிக்கொண்டுள்ளார். இதற்கு அவர் கடைப்பிடித்த வழி சிம்பிள்.‘வயசாகிடுச்சு’ என்று நினைக்காமல், இலக்கை அடைவதற்கு இன்னும் காலமும் வயதும் இருக்கிறது என உணருங்கள். பிரச்னைகளை அசை போட்டு மனதை தளர்ச்சி அடையச் செய்யாமல், எல்லா சிக்கல்களையும் நம்மால் சந்தித்து மீள முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
வாக்கிங் உட்பட சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை விடாமல் செய்யுங்கள்.இன்றைய மருத்துவம் எவ்வளவோ முன்னேறியுள்ளது. எனவே, 50 - 60 வயது என்பது 20 - 30 வயதுக்கு சமம்!இதைத்தான் தன் வாழ்க்கை வழியே உலகின் அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உணர்த்தியிருக்கிறார் ஜோ பைடன்!
சைபர் மேன்
|