சைபர் கிரைம் பின்னணியில் விஷாலின் ஆக்‌ஷன்!



‘‘எனக்கு எப்போதும் சினிமாதான் உணவு, கனவு, சந்தோஷம் எல்லாம். ஒவ்வொரு படத்தையும் இது கமர்சியல், ஆர்ட் பிலிம்னு நாம சொல்றதுக்கு வேலையே இல்லாமல் ரசிகர்களே எல்லாத்தையும் தீர்மானிக்கிறாங்க. இப்படித்தான் படங்கள் செய்யணும்னு சில விதிகள் இருந்தது. இப்ப சகலமும் மாறி சினிமாவும் மாறுபட்டு நிக்குது. படத்தோட எல்லா ரகசியங்களும் வெளியே தெரியுது. 20 வருடத்துக்கு முன்னாடி இருந்த ரசிகர்கள் இப்ப வேறுபட்டு நிக்கிறாங்க.

இன்றைய காலத்துக்கு படம் புதுசா இருந்தா யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்குறாங்க. இந்த சமயம் ‘சக்ரா’ வர்றது நல்ல விஷயம். விஷால் சார் தமிழ் சினிமாவில் ஒரு மரியாதையான இடத்தில் இருக்கார். அவருக்கு இருக்கிற அங்கீகாரத்தை தக்க வைக்கணும்னு எனக்கும் ஆசை.

என்னோட முதல் படம் வேற. மிகவும் ஆத்மார்த்தமாகப் போய் ஒரு மூட் செட் பண்ணி உட்கார்ந்துட்டேன்...’’ இணக்கமாகப் பேசுகிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன். இயக்குநர் எழிலின் சீடர்.சக்ரா எப்படி இருக்கும்..? கதாபாத்திரங்கள் வழியா கதை சொல்றேன். சைபர் கிரைம் உச்சமா இருக்கிற காலகட்டம் இது. நாம் இருக்கிற இடத்தில் நேரடியாக வந்து எதுவும் செய்யாமல் எங்கிருந்தோ செயல்படறாங்க.

ஒரு வீட்டில் திருடு போக உள்ளே போலீஸ் புகுந்து ஆராய்ந்தால் அதன் ஆதி அந்தம் வேற எங்கோ போகுது. அதன் அடுத்தடுத்த பயணம் வேறு எங்கோ போகுது. பரம்பரை பரம்பரையாக இராணுவப் பின்னணியில் இருக்கிற விஷாலின் குடும்பம் பெற்ற அசோக் சக்ரா கோல்டு மெடலும் காணாமல் போக விஷாலும் களமிறங்குகிறார். அதன் அடுத்தடுத்த நிமிடங்களை நீங்கள் தவறவிடவே முடியாது.

ஐந்துநாள் கிரிக்கெட் பரபரப்பா விளையாடின காலம் போய் இப்ப 20/20 மேட்ச் ஆகிப்போச்சு. அந்த பரபரப்பு மனநிலையில்தான் நாம் இருக்கோம். இந்தப் படத்தில் எனக்கு சொல்ல வேண்டியது நிறைய இருந்தது. நம் கண்ணில் படக்கூடிய நிகழ்வுகள், நாம் அறியாமல் நாம் களவாடப்படுகிற விதம், அதற்கான திட்டம் என்ன, அதிலிருந்து தப்பிக்கிறது எப்படின்னு படம் நாலுகால் பாய்ச்சலில் போகும்.

சகலர்க்கும் புரிகிற மாதிரிதான் படம் எடுத்திருக்கோம். நாமே எளியவங்கதான். ரெண்டு கையாலதான் அள்ளிப் பருக முடியும். அப்படித்தான் ‘சக்ரா’வும் இருக்கும்.இதை விஷாலே தயாரிக்கும்படி எப்படி அமைஞ்சது..?ஒன் லைனா கதையைச் சொன்னபோதே இதன் விஸ்தீரணம் அவருக்குப் புரிஞ்சி போச்சு. அதை ரெண்டு மணிநேரம் ஸ்கிரிப்ட்டாக சொன்னபோது அவருக்கு இன்னும் அதிகம் நம்பிக்கை வந்துவிட்டது.

ஒரு ஸ்கிரிப்ட்டை நாம் பக்குவமாக ஒன்றிப்போய் எழுதிக்கூட விடலாம். அதை முழுமையாகக் கொண்டு போய் சேர்க்கிறது ஹீரோ கையில்தான் இருக்கு. விஷால் சார் எங்க கைக்கு வந்துட்டார். அவருடைய பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் இதில் வந்திருக்கு. ஒவ்வொரு பதட்டத்துக்கும், திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும், பரபரப்புக்கும் அவர் நடிப்பில் பிரமாதமாக ஈடு கொடுத்தார். சைபர் கிரைம் கதைகள் வித்தியாசமானவை…

அந்த உலகமே தனி. சதா திட்டங்களோடும். அதே நேரம் தெளிவோடும் இயங்கிக்கிட்டே இருப்பாங்க. தனிமனுஷனா இருந்தாலும் ஓர் அரசாங்கம் மாதிரி செயல்படுவாங்க. அது ஒரு ஹீரோயிசம். சமயங்களில் அது தருகிற த்ரில் அவங்களுக்கு பிடிச்சிருக்கும். ஃப்ளானிங் லெவலில் பின்னி எடுப்பாங்க. அவர்களோடு அவர்கள் வழியில் சென்று சந்தேகமில்லாமல் பிடிக்க வேண்டும்.

விஷால் சாரின் ஸ்பெஷல் என்னன்னா ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரது சொந்தப்படமாகவும் இது இருந்ததால் நேரத்தையும் இடத்தையும் அளித்தார். என்னை புதுமுக இயக்குநர்தானே என்று அலட்சியமாக ஒருநாளும் நடத்தியது கிடையாது. நாம் நினைக்கிறதை அடைகிற வரைக்கும் அவரும் நமக்கு துணையாக நிற்பார். படத்தில் நல்ல திடகாத்திரமான கேரக்டரும் கூட. அவருக்குரிய தலைமைப் பண்பும், துணிச்சலும், உடனே முடிவெடுத்து வழி
நடத்துகிற திறனும் படத்திலும் சரியாக வந்திருக்கும்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை எப்படி கொண்டுவந்தீங்க..?

கன்னடத்தில் அவங்க செய்த ‘யு-டேர்ன்’ படத்தில் அவங்களுக்கு ரொம்ப நல்ல பெயர். அழுத்தம் திருத்தமாக களையாக தட்டுப்படுகிற முகம். ரொம்ப அருமையாக செய்திருக்காங்க. சினிமாவை ரொம்ப விளையாட்டாக எடுத்துக்கொள்ளாத பொண்ணு.

விஷால் நிதானமாக யோசித்து செயல்பட, கோபமும் கொந்தளிப்புமாக ஸ்ரத்தா இருப்பாங்க. இவ்வளவு அக்கறையா இருக்கிற ஹீரோ, அருமையா கவனிப்பா இருக்கிற ஹீரோயின்னு இருந்தா ஒரு டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். எனக்கும் இருந்தது. அந்த சந்தோஷம்தான் வெற்றி.இசைக்காக என்ன செய்திருக்கீங்க..?

படத்தில் ரெண்டே பாடல்கள்தான். இது ரீ-ரெக்கார்டிங்கில் அதிகம் வேலை வாங்கிய படம். யுவன் சங்கர் ராஜாதான் மியூஸிக். இவ்வளவு படம் செய்தபிறகும் அவர் மியூஸிக்கை சாதாரணமாக எடுத்துக்கிட்டது கிடையாது. மக்களுக்கான டியூன் போட்டு அவர்களுக்கான
இசையையே அவர் தருகிறார்.

நல்லிசையும் மெல்லிசையும் இணைகிற இடத்தில் அவர் இருக்கார். ஒளிப்பதிவுக்கு பாலசுப்பிரமணியெம். அவரது பெரிய அனுபவத்தில் வெச்ச முதல் பிரேமிலேயே எங்கிருந்து வந்தோம் என காட்டிவிடுகிறார்.

சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் அவர்களின் திறமையின் உச்சத்துக்கு போயிருக்கிறார்கள். மக்களுக்கு எச்சரிக்கை படுத் துகிற ஒரு சினிமா செய்து அது வும் அழகாகவும் வந்திருக்கும் போது ஒரு நம்பிக்கைச் சித்திரம் மனதில் வருகிறது. அதனாலேயே ‘சக்ரா’வை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது.l

நா.கதிர்வேலன்