Data Corner



*2020ம் ஆண்டில் ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பர்கள் இரவு நேரத்தை விட பகலில் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன. முதலிடத்தில் ஹைதராபாத், 2ம் இடத்தில் சென்னை.

*60% ஆக உயர்ந்துள்ளது இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை. 2014ல் 7,910 ஆக இருந்தது 2020ல் 12,852 ஆக அதிகரிப்பு.  

*47% ஆக குறைந்திருக்கிறது உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம்.

*15.07% அதாவது 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இவை ரூ.32.008 கோடி முதலீட்டில் 8,000 வகையான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

*3% உணவுப் பொருள்கள் மட்டுமே இந்திய அளவில் பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30% காய்கறிகள், பழங்கள் வீணாவதாக இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

*1.72 கோடி இந்தியக் குழந்தைகள் - 10 முதல் 19 வயது வரை - திருமணம் முடித்துள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 7%.

*ரூ.317.6 (US$4.89 - 2017) - இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிப்பவர்களான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு பெறும் சம்பளம். அமெரிக்காவில் எந்த சாதாரண வேலையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளம் US$7.25 / மணி, தென்கொரியாவில் US$6 / மணி, தைவானில் US$4.54 / மணி, சீனாவில் US$2.83 / மணி.

*52.4% - இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா பொருளாதாரத்தின் பங்கு.  நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களில் அங்கு வேலைசெய்யும் முறைசாரா (முறையான பணி ஒப்பந்தம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, சமூக பாதுகாப்பின்றி வேலை செய்பவர்கள்) தொழிலாளர்களின் அளவு 86.8%. இதில் விவசாயத் தொழிலாளர்கள் மட்டும் 40%க்கு மேல் இருக்கிறார்கள்.

அன்னம் அரசு