வலைப்பேச்சு



@Kannan_Twitz - யாரொருவருக்காக உடனிருக்கும் ஒவ்வொருவரையும் துச்சமென தூக்கிப்போட்டோமோ வெகு விரைவில் அந்த ஒருவரால்தான் யாருமற்று தனித்தலைவோம்!

@laksh_kgm - பறக்கும்போதும் கால்களை மறந்து விடாதே! தரைக்கு வந்தாக வேண்டும்.

@LuckyRikas - ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப்போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!

@HariprabuGuru -
மழையின்போது நீரும் நீர் சார்ந்த பகுதியாகவும்; மழைக்குப் பின் சேறும் சேறு சார்ந்த பகுதியாகவும் இருக்கின்றன சென்னை சாலைகள்!

@sakthibalu007 - எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறில்லை... எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று
நினைப்பதுதான் தவறு!

@gerberaPoo - மனசுக்கு நெருக்கமான சில பாடல்களை Ear phoneல கேட்கும்போது மனசுக்குள் ஊடுருவிப் போய் நினைவுகளை எழுப்பிவிட்டு அழவைக்கும் தன்மை கொண்டவை..!

@ShakthiBoy_ - உன் எதிரிகள் யூகிக்கும் அளவுக்கு நீ திட்டங்களை வகுக்காதே... அவர்கள் யூகித்துவிட்டால் அதுதான் தோல்வியின் ஆரம்பம்.

@Vihashini13 - ஒப்பிடுவது தவறில்லை; ஒப்பிடப்படுவது யாருடன் என்பதே தவறாக உள்ளது...

@asdbharathi - தனக்குள்ளே கேட்டுக் கொள்ளப்படும் பல கேள்விகளுக்கான விடைகளே அறிவாகிறது.

@little_heartsss - சில காயங்கள் ஆறாமல் இருப்பதே நல்லது. மீண்டும் காயங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க...

@JeyaKris_offl - எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் மனசுனு ஒண்ணு இல்லனா பலவீனமான மனிதன்தான்.

@sankariofficial - தனியாகப் பறக்கும் பறவையும், தனித்து வாழும் பெண்ணும் அதிக பலம் வாய்ந்தவர்கள்...

@Kozhiyaar - ஞாயிறு காலையில் ‘ஏன் வாழ்கிறோம்’னு திடீர்னு ஓர் எண்ணம்! அப்புறம் கறி வாசனை வரவும் காரணம் புரிஞ்சுடுச்சு!

@jokinjey -
பொறியியல் கல்லூரி யில் Engineering கத்துக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை... வேலை கேட்டு எப்படி ஒரு கடிதம் எழுதுவது என்பதையாவது கற்றுக் கொடுங்கள்... Quality of education almost hit rock bottom... Sad.

@angry_birdu - மத்திய பல்கலைக்கழகங்களில் இணைப் பேராசிரியர் பணியில் OBCக்களின் எண்ணிக்கை - முட்டை. பேராசிரியர் பணிகளில் OBCக்களின் எண்ணிக்கை - முட்டை. மாநிலங்களவையில் 27.6.2019 அன்று மத்திய அரசு அளித்த புள்ளி விவரம்.

@manipmp - கொரோனாவால் குறைந்தது பாடத்திட்டம் மட்டும்தான்.

@minimeens - அடேய்... கட்சி ஆரம்பிச்சதையும் என் கணக்குல எழுதிடாதீங்க. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.!

- இப்படிக்கு, வருடம், 2020.

@Ilango Krishnan - அப்பா, இங்கிலீஷை கண்டுபிடிச்சது யாருப்பா?
இங்கிலீஷ்காரங்க.
அப்போ எங்க இங்கிலீஷ் மிஸ் இங்கிலீஷ்காரங்களா..?

இல்லடா... அவுங்க சொல்லித் தர்றவங்க. இங்கிலீஷ்காரங்க இங்கிலாந்தில், அமெரிக்காவில்தான் இருப்பாங்க.
அப்பா... அப்பா... மேத்ஸ்காரங்க எந்த நாட்டில் இருப்பாங்க..?
மேத்ஸ்காரங்களா..? மேத்ஸ்காரங்கன்னு யாரும் கிடையாது பாப்பா...
அப்புறம் எப்படி எங்க மேத்ஸ் மிஸ்ஸுக்கு மேத்ஸ் தெரியுது..?
மகளே, போதும் நிறுத்திக்குவோம்..!

@Saravanakarthikeyan Chinnadurai - அரசாங்கப் பணத்தில் ஊழல் செய்வது என்பது வேறு, நேரடியாக மக்களிடம் அடித்து மிரட்டிப் பிடுங்குவது என்பது வேறு. தர்க்கம் பார்த்தால் இறுதியில் இரண்டிலுமே பொதுமக்களின் பணம்தான் கொள்ளையிடப் படுகிறது என்றாலும் இரண்டாவதில் மிக நேரடியாக மக்கள் பாதிப்புறுகிறார்கள். முதலாவது தன்னைப் பாதிக்கிறது என்றே பலருக்கும் புரிவதில்லை. அல்லது எவ்வளவு தூரம், எப்படி தம்மைப் பாதிக்கிறது என்பது தெளிவில்லை. அதனால்தான் ஊழல் குற்றங்களைவிட ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு முதலிய குற்றங்கள் பெரிய எதிர்மறைகளாகக் கருதப்பட்டு கட்சியின் முகமாகி விடுகிறது.இது கட்சிகளுக்கு ஒரு முக்கியமான பாடம்.

@dharmaraaaj - அறிஞர்அண்ணா அவர்கள் கட்சி ஆரம்பித்து வளர்ந்து கொண்டிருந்த நாட்களில். கட்சி தோல்வியடைந்தால் என்னால் கழகம் தோற்றது என்பார். அவர் வென்றால் கழகத்தால் நான் வென்றேன் என்பார்... அவர் தலைவர்.

@writernaayon - எங்கள் குடும்பத்துத் தலைமுறைகளில் எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் இது அவன் சாயல், இது அவள் சாயலென என் கொள்ளுப் பாட்டி சொல்லிவிடுவாள். என் மூக்குகூட பெரிய அத்தையின் சாயலாம். கொள்ளுத் தாத்தாவின் சாயலென இதுவரை யாரையும் சொன்னதாய் நினைவில்லை, ஒப்புக்கும் கணவனை ஒப்பிட விரும்பாதவள்.

@Bogan Sankar - காலையில் வள்ளியூர் சந்தையில் மட்டுமே கேட்கக் கிடைக்கக்கூடிய மஹாவசனம்: ‘‘அண்ணாச்சி! நீங்க ஒரு அண்ணாச்சிங்களா?!’’

@Ramanujam Govindan - இன்றே கடைசியாக இருக்கும் விஷயங்கள் எல்லாமே நாளைதான் நம் கண்ணில் படும்!

@Meenakshi Sundaram- ஆன்லைனைவிட கடைல ஜவுளி எடுக்கறதுதான் பெஸ்ட்டுனாங்க தோழி. ஏதோ பொருளாதார மேட்டர்னு பார்த்தா கடைசில அங்கதான் கட்டைப்பை கிடைக்கும்ன்றாங்க!

@Sha_eevaa -
60 வயதைத் தாண்டிய அப்பா கூட உட்கார்ந்து அவங்க இளமைக் கால கதைகளை எல்லாம் கேட்டுப் பாருங்க... அது எல்லாம் சொல்லும்போது அவங்க மனதில் ஏற்படும் இன்பம் Vera level!

@Gokul Prasad - “ஏதோ பத்திரிகை நடத்திட்டு இருக்கியாமே?”
‘‘ஆமா...”
“நீ கூட எழுதறியாமே?”
“ஆமா...”
“ரைட்டர் ஆயிட்ட. வாழ்த்துகள்...”
“தாங்க்ஸ்...”
“என் குழந்தைக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேரா சொல்லேன். கோ, ஸா, ஸூலதான் பேர் வைக்கணுமாம்...”

“என்னைய பார்த்தா எப்படித் தெரியுது? முதல்ல, ஸூல எப்படிரா தமிழ் பேர் வைப்ப?”
“அப்படித்தான் எழுதிக் கொடுத்திருக்காங்க...”
“என் பேரையே வை.
பெரிய ஆளா வருவான்...”
“பொம்பளப் புள்ளடா...”
“அப்ப கோகிலான்னு வையி. போடா...”

@Bilal Aliyar - கொடுக்கவேண்டிய பணத்தை உங்களுக்கு இன்று தருகிறேன் என்று சொன்னால், எவ்வளவு தருகிறாய் என்று கேட்க வேண்டும். நீங்களாக ஒரு தொகையை நிர்ணயம் செய்து அந்த அமெளண்டை வாட்ஸப்பில் குறிப்பிட்டு ‘அக்கவுண்டில் போட்டுவிடு’ என்று சொன்னால், பணம் வாங்கியவனுக்கு நெஞ்சு வலி வருமேன்னு கொஞ்சங்கூட யோசிக்க மாட்டீங்களா?!

@Paadhasaari Vishwanathan - செயலால் மட்டுமே தன் அர்த்தத்தின் முழுமையைப் பொதிந்துகொள்ளும் சொல்: கருணை. பரிவு, தயை, காதல், பாசம்,  அன்பு... என இன்னபிற சொற்கள் யாவும் காலமிடம் தீண்டாக் ‘கருணை’ எனும் சொல்லின் குழந்தைகள்.