எப்பவும் கை கழுவுவேன்!



மாலத்தீவில் க்ளாமர் டால்ஃபினாக துள்ளிக் குதிக்கிறார் வேதிகா. அவரது இன்ஸ்டாவில் முன்பெல்லாம் ஷார்ட்ஸ் - செமி டாப் மினுங்க குத்து டான்ஸ் ஆடும் வீடியோக்கள்தான் அள்ளும். இப்போது பேபி, தீவில் பிகினியில் குளுகுளுக்கும் போஸ்கள்தான் ஹைலைட். கடற்கரை மணலில் கால்நீட்டியபடி, ‘யாராவது ஒருத்தர் வந்து நம்ம லைஃபை மாத்தமாட்டாங்களானு நினைச்சீங்கனா, உடனே போய் கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க...’ என ஜாலி தத்துவமும் உதிர்க்கிறார்.

அடுத்த டான்ஸ் வீடியோ எப்போ?

லாக்டவுன்ல சும்மா ஃபன் ஆக ஆடினதுதான் அதெல்லாம். அதேநேரம், ஐ லவ் டான்ஸ். நான் ஸ்கூல் படிக்கும்போதே படங்கள் பார்க்கும்போது, ஆக்ட்டிங்கை விட, டான்ஸைத்தான் கவனிச்சு பார்ப்பேன். ஸ்கூல்லயும் டான்ஸ் காம்படிஷன்ல கலந்துக்க எங்க அம்மாவும் என்கரேஜ் பண்ணுவாங்க. கல்ச்சுரல்ஸ்ல ஆடி கைதட்டல் வாங்கினப்ப, இன்னும் பெஸ்ட்டா பர்ஃபார்ம் பண்ணணும்னு ஆசை வந்தது. சொல்லப் போனா நடிப்பு மேல ஆசை வரவே டான்ஸ்தான் காரணம். ஜிம்மை விட பெஸ்ட் எக்ஸர்சைஸ் டான்ஸ்தான்.

தமிழ்ல அழகா பேசுறீங்களே...?

நன்றி. நான் பிறந்து வளர்ந்தது மகாராஷ்டிரானாலும், தென்னிந்திய மொழிகள்ல அறிமுகமாகும்போது மத்த லாங்குவேஜ் எதுவும் பேசத் தெரியாது. கன்னடம் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சுக்குவேன்.பட், புது மொழிகள் கத்துக்கறதுல ஆர்வம் அதிகம். மொழி தெரிஞ்சு நடிச்சா, எக்ஸ்பிரஷன்ஸை பர்ஃபெக்ட்டா கொடுக்க முடியும். ஸோ, மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு எல்லாம் பேச கத்துக்கிட்டேன்.

இப்படி மொழி கத்துக்கற பிராசஸ்ல என்னை ரொம்ப விரும்பி கத்துக்க வச்சது தமிழ்தான். பாலிவுட் பேட்டிகள்ல கூட இதைச் சொல்லியிருக்கேன். இப்ப என்னோட தாய்மொழியை விட, ரொம்ப சரளமா தமிழை பேசுறேன்னு என் ஃப்ரெண்ட்ஸ் கூட சொல்றாங்க.

பாலிவுட், தென்னிந்திய இண்டஸ்ட்ரி - இந்த ரெண்டில் எதை அதிகம் விரும்பறீங்க?

இப்ப எல்லா மொழி படங்களும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகுது. ஆனாலும், பாலிவுட்ல ஒரு படம் ரிலீஸ் ஆனா அது வேர்ல்டு வைட் ரிலீஸ்தான். அதேநேரம் தென்னிந்திய மொழிப் படங்களின் பிசினஸ் எல்லைகளும் இப்ப விரிவடைஞ்சிருக்கு. ஆல் ஓவர் த வேர்ல்டு அதுவும் ரிலீஸ் ஆகுது. மாஸ், கமர்ஷியல், ஆக்‌ஷன், காமெடினு ஒரே படத்துல அழகான பேக்கேஜ் இருக்கு.

குறிப்பா தமிழ், மலையாள மொழிப் படங்கள்ல நல்ல கன்டன்ட், கதைகள் பிரமிக்க வைக்குது. ‘பரதேசி’, ‘காவியத் தலைவன்’, ‘முனி’, ‘கஸின்ஸ்’, ‘காஞ்சனா 3’னு என் ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு ஜானர்தான். எல்லாமே பிரமாதமான ஸ்டோரீஸ்தான்.
உங்களப்பத்தி, எங்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சொல்லுங்க..

நோட் பண்ணிக்குங்க. ஹாரர் படங்கள் நிறைய நடிச்சதால, பேய் மீதான பயம் கிடையாது. ஆனா, பல்லியைப் பார்த்தா நடுங்குவேன். இன்னொரு சீக்ரெட்... எப்பவும் ஹைஜீனிக் பார்ப்பேன். கைகளை எப்பவும் டெட்டால் போட்டு க்ளீன் பண்ணிட்டே இருப்பேன். அதைப் போல டிஷ்யூ பேப்பர் எப்பவும் வச்சிருப்பேன்.

உங்ககிட்ட ஒரு டைம் ட்ராவல் மெஷின் கிடைச்சா எந்த காலத்துக்கு பயணப்படுவீங்க..?

கடந்த காலம் எதுக்கும் ட்ராவல் ஆக மாட்டேன். அப்படி ட்ராவல் ஆகி, நடந்து முடிஞ்ச ஒரு விஷயத்தை மாத்தவும் விரும்பல. என்னைப் பொறுத்தவரை, ஐ லவ் பிரசன்ட். நிகழ்காலத்தை கொண்டாட விரும்புறேன்.   

மை.பாரதிராஜா