Data Corner



*20% குறைவாக இருந்தது ஊரடங்கிற்கு முன் பணிபுரிந்த ஆண்களை விட பெண்கள் வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு.

*1965 - 2019 காலகட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வருடத்துக்கு சராசரியாக 3 - 6 புயல்கள் அல்லது தாழ்வு மண்டலங்கள் வங்கக் கடலில் உருவாகியிருக்கின்றன. 54 ஆண்டுகளில் சுமார் 198 புயல்கள் அல்லது தாழ்வு மண்டலங்கள் வங்கக் கடலில் உருவாகியிருக்கின்றன. இந்த 198 என்கிற எண்ணிக்கை காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், தீவிர புயல், அதி தீவிர புயல் என அனைத்தையும் சேர்த்து.

*2015 - 16ம் ஆண்டில் நடத்தப்பட்ட சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 4; தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 2; மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 3 ஆகியன எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்கள், பிற குழுக்களை விட ஊட்டச்சத்து விளைவுகளில் மோசமாக உள்ளன என்று கண்டறிந்தன.

*2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2.68 கோடி இந்தியர்கள் அல்லது 2.2% பேர் மாற்றுத் திறனாளிகள்.  

*24% - பொருளாதாரக் கணக்கெடுப்பு 2017 - 18ன் படி, பணி புரியும் பெண்களுக்கான இந்தியாவின் விகிதம். இது தெற்காசியாவில் மிகக் குறைவான ஒன்று.

*2020 அக்டோபர் கணக்குப்படி, 10 ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கும் சுமார் 4.34 லட்சம் நிறுவனங்கள், ஜூம் செயலிக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இது கடந்த அக்டோபர் 2019 காலாண்டில் இருந்தை விட 485%  அதிகம்.

*2015 - 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் கழிவு நீா்த் தொட்டிகளிலும், கழிவுநீர் ஓடைகளிலும் இறங்கி துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 375க்கும் மேலானவா–்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அன்னம் அரசு