நியூஸ் வே



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           ஐஸ்வர்யா ராயின் வி.ஐ.பி. ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லிஸ்ட்டில் லேட்டஸ்ட், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி. மும்பையிலிருந்து ஒரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றார்கள். ஐஸ்வர்யாவுக்கு என்ன பிடிக்கும், அவரது ஹாபி என்ன என்றெல்லாம் ஆர்வமாக விசாரித்தாராம் கிலானி.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு எடுக்கப் போவதாகவும், இது ரொமான்ஸ் படமாக இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளோடு இருக்கும் என்றும், இதில் தனக்கு ஜோடி ‘மதராஸபட்டினம்’ எமி ஜாக்சன் என்றும் சிம்பு ஒரு பேட்டியில் சொன்னார். ஆனால் இந்த எல்லா விஷயங்களையும் மறுத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். கௌதமுக்கு அடுத்த ஆண்டு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிம்பு. அப்போ வேற படம் எடுப்பாரோ!

 தாமரை விதைகளை ஆலிவ் எண்ணெயில் வறுத்து, அதை நொறுக்குத் தீனியாக சாப்பிடுகிறார் கரீனா கபூர். ஸ்லிம் ரகசியம் இதுதானோ!

 ‘களவாணி’ சற்குணம் இயக்கும் ‘வாகை சூட வா’ பீரியட் ஃபிலிம். இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழை அந்தக்கால டிரங்கு பெட்டி மாதிரி வடிவமைத்திருந்தார்கள். உள்ளே அந்தக் காலத்தில் வரும் பாட்டு புத்தகம் போலவே படத்தின் பாடல்களை அச்சிட்டு வைத்திருந்தார்கள். கூடவே பழமை எஃபெக்ட்டுக்காக சிலந்தி வலை; ஒரு கரப்பான் பூச்சி.

 ஹாலிவுட்டில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வசதியாகத்தான் இருக்கிறார் மல்லிகா ஷெராவத். லாஸ் ஏஞ்சல்ஸில் இரண்டு ஆடம்பர ஃபிளாட்கள் வாங்கியிருக்கும் அவர், மெர்சிடஸ் எஸ்.எல்.500 சொகுசு காரும் புதிதாக வாங்கியிருக்கிறார்.

இலியானா எங்கு போனாலும் அழகான காலணிகள் தேடி வாங்குகிறார். ‘நண்பன்’ ஷூட்டிங்குக்காக ஸ்பெயின் போனபோதும் வாங்கினார். அவரிடம் இருப்பது 60 பிளஸ் ஜோடி காலணிகள்.

 ‘அவன் இவன்’ வால்டர் வணங்காமுடி கேரக்டருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்க, சத்தமில்லாமல் இமயமலை போயிருக்கிறார் விஷால். டிரெக்கிங், யோகா என்று இயற்கையோடு ஒரு வாரம் வாழ்ந்துவிட்டு வருவாராம்!