கேஸ் விலையேற்றத்தால் கவலை வேண்டாம்... அடுப்பில்லாமலே சமைக்கலாம் 500 அயிட்டங்கள்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                     நானூறு ரூபாயைத் தொட்டுவிட்டது கேஸ் சிலிண்டர் விலை.

அடுப்பு எரிகிறதோ இல்லையோ, பல பேரின் வயிறு எரிகிறது விலையேற்றத்தால்!

‘ஆதிவாசிகளைப் போல இலையையும் தழையையும் சாப்பிடப் பழக வேண்டியதுதான்’ என்கிற புலம்பல் பரவலாக!

‘‘சமைக்காத உணவு ருசிக்காதுனு யார் சொன்னது? அடுப்பே இல்லாம அறுசுவை விருந்தே சமைக்கலாம் தெரியுமா?’’ என்கிறார் செஃப் கிரிஜா. ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பல வருட அனுபவம் உள்ள கிரிஜா, அடுப்பே இல்லாமல் ‘பிரியாணி முதல் பாசந்தி’ வரை ராஜ விருந்து சமைப்பது பற்றி, அடுத்த மாதம் லிம்கா உலக சாதனையும், அதையடுத்து கின்னஸ் சாதனையும் நிகழ்த்த இருக்கிறார். அதே நிகழ்வில், அடுப்பில்லாமல் சமைக்கக்கூடிய 100 உணவுகள் அடங்கிய செய்முறைப் புத்தகத்தையும் வெளியிடப் போகிறார்!

‘‘சில வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காவுல 2 நாளைக்கு திடீர்னு பவர் கட் ஆச்சு. அங்கல்லாம் ஒரு வாரம், பத்து நாளைக்கு சேர்த்து சமைச்சு, ஃப்ரிட்ஜ்ல வச்சு, அப்பப்ப மைக்ரோவேவ் அவன்ல சூடு பண்ணி சாப்பிடுவாங்க. இந்த பவர் கட்டால, ஒட்டுமொத்த அமெரிக்காவும் சாப்பாடு இல்லாமத் தவிக்க, மக்கள் எல்லாரும் இந்தியன் ரெஸ்டாரன்ட்டுகளை தேடி ஓடினாங்க. அங்கதான் அவங்களுக்கு தோசை கிடைச்சது. உணவில்லாம தத்தளிச்சப்ப, இந்திய உணவுதான் அவங்களைப் பசியாறச் செய்தது. அப்பதான் எனக்குள்ள ஒரு பொறி தட்டினது. ஒருவேளை கேஸ் அடுப்புக்கும் தட்டுப்பாடு வந்தா, மக்கள் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்கனு யோசிச்சேன்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஇயல்புலயே எனக்கு இயற்கை உணவுகள் பிடிக்கும். அந்த அடிப்படைல அடுப்பி ல்லாம என்ன வெல்லாம் சமைக்க முடியும் ங்கிற முயற்சி களை ஆரம்பிச்சேன். முதல்ல 16 அயிட்டங்கள் நல்லா வந்தது. அப்புறம் அது 100 அயிட்டங்களாச்சு. இப்ப என்னால 500 அயிட்டங்கள் வரை அசத்த முடியும்’’ என மிரள வைக்கிறார் கிரிஜா.

பச்சை வாடை போக வதக்கவும்... பொன்னிறமாகப் பொரிக்கவும்... தளதளவென கொதிக்கும் வரை காத்திருக்கவும்... தாளிக்கவும்...

& சாதாரண சமையலுக்கு ருசி கூட்டுகிற மேற்படி வேலைகள் எதுவும் கிடையாது கிரிஜா சொல்கிற அடுப்பில்லாத சமையலில். பிறகு உணவு எப்படி ருசிக்கும்?

‘‘கிழங்கு வகைகளைத் தவிர்க்கணும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் இந்த வகை சமையலுக்கு ஏற்றது. ஹைலைட்டான விஷயம், இதுல சேர்க்கிற மசாலா. வழக்கமான சமையலுக்கு உபயோகிக்கிற எல்லா மசாலாவும் உண்டு. காய்ந்த மிளகாயும் பூண்டும் சேர்த்து அரைக்கிற பொடியை எல்லாத்துலயும் சேர்க்கலாம். தவிர மத்த மசாலா அயிட்டங்களை நல்லெண்ணெய் அல்லது நெய்ல ஊறவச்சு சேர்த்தா, பச்சை வாடை வராது. இந்த சமையல்ல தாளிப்பு கிடையாது. Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ஆனா, அதோட மணம், சுவை இருக்கும். கடுகுக்கு பதில் கடுகுப்பொடி, வெந்தயத்துக்கு பதில் வெந்தயப்பொடி சேர்த்தாலே போதும்... சாத வகைகளுக்கு அரிசி தேவையாச்சே... அரிசிக்குப் பதில் அவல். பொங்கல்லேர்ந்து, பிரியாணி வரைக்கும் அது அவல்ல செய்ததுனு நீங்க சத்தியம் பண்ணினாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ டேஸ்ட்டியா இருக்கும்...’’  பேசிக்கொண்டே, தலைவாழை இலையில் அத்தனை பதார்த்தங்களையும் வரிசையாக அடுக்குகிறார். ஜிகர்தண்டா, இளநீர் பாயசம், சர்க்கரை பொங்கல், விதம்விதமான துவையல், கொள்ளு சாதம், எள்ளு சாதம், வெஜிடபிள் பிரியாணி என ஏழெட்டு ரக சாதங்கள்; புடலங்காய் பொரியல், வாழைத்தண்டு கூட்டு, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, இஞ்சி அல்வா, நாவல் பழ சர்பத், வல்லாரை ஜூஸ், பேரீச்சம் பழ மில்க் ஷேக், மாம்பழ பாசந்தி... இப்படி நாற்பதுக்கும் மேலான அயிட்டங்கள்!

விவேக் சாலட், வடிவேலு ரைத்தா, எந்திரன் டிலைட், சிட்டி சாட்... இப்படி சில அயிட்டங்களின் பெயர்கள் கவனம் ஈர்க்கின்றன.

‘‘விவேக்கோட காமெடி எல்லாத்துலயும் அறிவுபூர்வமான மெசேஜ் இருக்கும். அறிவோட சம்பந்தமுள்ள காய்கறி, பழங்களை வச்சு பண்ணதால அந்தப் பெயர். தேங்காய், பேரீச்சம் பழம், தேன், நட்ஸ் வச்சு பண்ற ஸ்வீட்டுக்கு எந்திரன் டிலைட்னு பேர். காரணம், அதுல இரும்புச்சத்து அதிகம். இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு தொடர்புண்டு!

சிலிண்டர் செலவை மிச்சப்படுத்தறது மட்டுமே இந்த கான்செப்ட்டோட நோக்கமில்லை. வீட்ல ஆளில்லாதப்ப சின்னக்குழந்தைங்க கூட பாதுகாப்பா சமைச்சு சாப்பிடலாம். பேச்சிலர்ஸுக்கு இனி பிரச்னையே இல்லை. ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்...’’ என்கிறவர், அடுப்பில்லாத சமையலைக் கற்றுக்கொள்ள நினைப்போருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தத் தயாராக இருக்கிறார். 25 அயிட்டங்கள் கற்றுக் கொள்ளலாம்.
 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்