ரெண்டுமே அழகு!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  பாவாடைக்காரிகளின் நினைவாக, முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூக்குத்தி அணியாத கிராமத்துப் பெண்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இம்மாதிரி அபூர்வமான விஷயங்களெல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ!
 மு.மதிவாணன், அரூர்.

பரபரப்பை பற்ற வைக்காமல், பக்குவமாக சூப்பர்ஸ்டாரின் நிலையைப் பற்றி செய்தி தந்த உமக்கு பாராட்டு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்.
 துரை சுப்ரமணியன், திருச்சி.

குடியை மறக்கச் செய்யும் 'அக்னிஸ்திரீ’யின் குதூகலக் குடும்ப டெக்னிக் வரவேற்கக்கூடியது.
 எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

5 மாத குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடமா? அடக் கொடுமையே... அடுத்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஸ்கூல் திறப்பாங்களோ..!
 அ.யாழினி பர்வதம், சென்னை-78.

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பிறக்கப் போகும் ரெட்டைப் பெண் குழந்தைகளுமே ரொம்ப அழகாத்தானே இருக்கும். கண்ணுபடப் போகுதய்யா மாமனார் அமிதாப் பச்சரே..!
 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

36 அத்தியாயங்களில் அற்புதமாக தன் வாழ்க்கை வரலாற்றினை சாலமன் பாப்பையா எழுதியிருப்பதை வாரா வாரம் சுவை குன்றாமல், பொருத்தமான புகைப்படங்களுடன் வெளியிட்டு எங்களின் நெஞ்சங்களில் நிலைத்து விட்டீர்கள். நன்றி... நன்றி..!
 தேவிமைந்தன், சென்னை-83.

தமிழனின் கலாசாரத்தை, மண்வாசனையை, தமிழன் பிரச்னையை முன்வைப்பதில் தங்கர் பச்சான் ஒரு ஜீனியஸ். தமிழ்ப் படங்களின் பார்வையை தமிழ் மக்கள் மேல் திருப்பும் அவர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
 பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

தானே பங்க்ச்சர் ஒட்டிக் கொள்ளும் ‘மிச்செலின்’ டயர் புதிய தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி. இந்த அவசரமயமான இயந்திர வாழ்வில் இத்தகைய தொழில்நுட்பம் அவசர, அவசிய தேவையும் கூட!
 எம்.தாரீக், சென்னை-91.

‘அவன் இவன்’ திரைப்படத்தின் நிறைகுறைகளை அழகாகப் பிரித்தெடுத்த தங்களின் விமர்சனக் குழு ஓர் அன்னப் பறவை என்பதை நிரூபித்திருக்கிறது. பாராட்டுகள்.
 பூ.திலகவதி, சிதம்பரம்.

ஒரு எஸ்.பி&யின் டைரியில் வரும் உண்மைச் சம்பவங்களைப் படிக்கும்போதே மனசு ‘தடக்.. தடக்...’கென்று அடித்துக்கொள்கிறது. வாரா வாரம் க்ரைம் நாவல் படிப்பது போன்று விறுவிறுப்பாக உள்ளது.
 ஏ.ஸ்டீபன் சார்லஸ், தூத்துக்குடி.

பழநிபாரதியின் ‘காற்றின் கையெழுத்து’ பகுதியில் நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த காம வேட்டைகளைப் படித்து மனம் பதறியது. பெண்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்.
 டி.வெங்கடேஷ்பாபு, காரமடை.

‘லோக்பால் ஃபுட்பால் மேட்ச்!’ கட்டுரையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் காங்கிரஸ் கட்சியின் கோபண்ணாவும் தந்துள்ள காரசாரமான விளக்கங்கள் விறுவிறுப்பாக இருந்தன.
செ.சொக்கலிங்கம், தஞ்சாவூர்.