| TikTok பாட்டி
 
 
குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டிகள் வரை எல்லோரும் புகுந்து விளையாடும் ஒரு மைதானமாக மாறிவிட்டது டிக் டாக். இதில் எல்லா பந்துகளையும் சிக்சர்களாக பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் ஃப்ளோரா யங் என்கிற பாட்டி.
  73 வயதான இவருக்கு ஏழு லட்சம் ஃபாலோயர்ஸ்! அமெரிக்காவின் லூசியானாவில் பிறந்த ஃப்ளோராவின் கணவர் ஒரு கொடுமைக்காரர். குடும்ப வன்முறையால் பாதிப்படைந்த ஃப்ளோரா அதிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை சுயமாக அமைத்துக்கொண்டார்.
 
 தன்னைப் போன்றே பாதிப்படையும் பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்ததின் விளைவுதான் இந்த டிக் டாக்.  தவறான உறவு, குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் எப்படியெல்லாம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைக் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை தன் அனுபவத்திலிருந்து பகிர்கிறார் ஃப்ளோரா.
 
 இவரது ஒவ்வொரு வீடியோவும் பத்து லட்சம் லைக்குகளை அள்ளுகிறது. ‘டிக்டாக் பாட்டி’ என்று ஃபாலோயர்கள் ஃப்ளோரோ யங்கை கொண்டாடுகின்றனர்.
 
 
 த.சக்திவேல் 
 
 |