குவாரன்டைன் குடிசை



மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் வீற்றிருக்கும் குக்கிராமம் டங்ஜாய். தலைநகர் இம்பாலில் இருந்து 115 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம், இந்திய சுகாதாரத் துறையின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது.

வெளி மாநிலத்தில் வேலை செய்த மணிப்பூர்வாசிகள் ஊர் திரும்பும்போது அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக 80 மூங்கில் குடிசைகளைக் கட்டி
யிருக்கின்றனர் டங்ஜாய் கிராம மக்கள். ஒவ்வொரு குடிசைக்கும் தனிப்படுக்கை, தனிக் கழிவறை, தண்ணீர் மற்றும் மின்சார வசதி, சமையல் செய்வதற்கான கேஸ் டேபிள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்திருக்கிறார்கள். ஒரு குடிசைக்கும் இன்னொரு குடிசைக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளி விட்டிருக்கின்றனர்.

அரசின் உதவியின்றி தங்களின் சொந்தப் பணத்திலேயே இக்குடிசைகளைக் கட்டியிருக்கிறார்கள் டங்ஜாய் மக்கள். கடந்த மாதம் ஒரு கிராம மக்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்கும், தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கும் இலவசமாக காய்கறிகளை வழங்கினார்கள். அந்தக் கிராமமும் மணிப்பூருக்குச் சொந்தமானதுதான்.

த.சக்திவேல்