கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்!‘‘குவாரன்டைன்ல ரிலாக்ஸ் பண்ண நிறைய டைம் கிடைச்சிருக்கு. நான் காலேஜ் படிக்கறப்ப நிறைய புக்ஸ் படிப்பேன். நடிக்க வந்ததுக்கப்புறம் டைம் கிடைக்கல. இப்ப ரீஸ்டார்ட் பண்ணிட்டேன். மறுபடியும் புக்ஸை தேடித் தேடி படிக்க ஆரம்பிச்சிட்டேன்.
சமீபத்துல Dr.Wayne Dyer எழுதின ‘The Power of Intention’ படிச்சு முடிச்சுட்டேன். நீங்க என்ன படிச்சு முடிச்சிருக்கீங்க..?’’ க்யூட்டான கேள்வியோடு புன்னகைக்கிறார் ராஷி கண்ணா. தமிழில் ஹரி - சூர்யா காம்பினேஷனின் ‘அருவா’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை3’ என ஆக்‌ஷனும் ஹாரருமாக பரபரக்கப் போகிறார்.

ராஷி, ரொம்பவே shy girlனு சொல்றாங்களே..?

100 பர்சண்ட் ட்ரூ. ஆனா, இப்ப நான் ஷை கேர்ள் இல்ல. பாலிவுட்ல ‘மெட்ராஸ் கஃபே’ படத்துலதான் அறிமுகமானேன். அதோட ஷூட்டுக்கு முன்னாடி கூச்ச சுபாவம் அதிகமா இருந்தது. நாலு பேர் என்னை சுத்தி இருந்தாலே எஸ்கேப் ஆகிடுவேன்.

இதனாலயே முதல் நாள் படப்பிடிப்பு அப்ப வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டுட்டேன்! எப்படி நடிக்கப் போறோமோனு நினைச்சு நினைச்சு அல்லு கழண்டுடுச்சு. உடனே, கேரவனுக்குள்ள போய் விசும்பி அழுதேன்.அப்புறம் எனக்கு நானே தன்னம்பிக்கையை ஏற்படுத்திட்டு தைரியமா போய் நடிச்சேன். படம் வெளியானதும் தியேட்டர்ல போய் அம்மா பார்த்தாங்க. அவங்களுக்கு பயங்கர ஷாக். ‘இவ்ளோ அழகா பர்ஃபார்ம் பண்ணியிருக்கீயே... நீதானா... நம்பவே முடியல.... கீப் ராக்கிங்’னு பாராட்டினாங்க!

ரெண்டாவது படம் டோலிவுட்ல. அதுதான் நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யான்னு மூன்று தலைமுறையும் நடிச்ச ‘மனம்’. அந்த ஷூட்டுக்கு போனப்ப, ஷை கேர்ள் ராஷி காணாமப் போயிட்டா! எனக்கே அது ஆச்சர்யம்தான்.

சமீபத்துல கூட விஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ பண்ணினேன். அதுல எனக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் லவ் பிரேக்அப் ஆகற மாதிரி ஒரு சீன். அதை ஷூட் பண்றப்ப கெளதம் கேரக்டராவே மாறியிருந்த விஜய் தேவரகொண்டா, ‘Raashi... I know there is a line for you... not for me’னு சொன்னார்.

எனக்கு கிர்ருனு ஆகிடுச்சு. யாமினி கேரக்டராவே மாறியிருந்த நான், அதுக்கான ரியாக்‌ஷன் கொடுத்தேன்! இப்ப கேரக்டரை உணர்ந்து நடிக்க ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லத்தான் இந்த இன்ஸிடண்டை உங்ககிட்ட சொன்னேன். அந்த ஷை கேர்ள் மறைஞ்சுட்டா!ஒரு கிரிக்கெட் வீரருடன் நீங்க டேட்டிங் பண்ணினதா நியூஸ் கசியுதே..?

நானும் கேள்விப்பட்டேன்! கொஞ்சமும் உண்மை இல்லாத நியூஸ் அது. அதை படிச்சப்ப டென்ஷன் ஆகிட்டேன். ஏன்னா, அப்படி ஓர் ஆளை நான் சந்திச்சதே இல்லை. எந்தவித அடிப் படை ஆதாரமும் இல்லாம எப்படி அப்படி ஒரு நியூஸ் வந்துச்சுனு எனக்கே புரியல.ராஷி சிங்கிளா... இல்ல பாய் ஃப்ரெண்ட் இருக்காரா..?

சத்தியமா சிங்கிள்தான்! யாருடனும் டேட்டிங் போனது கூட இல்ல. ஆனா, அப்படி டேட் போக ஆசை இருக்கு. பட், அதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு வீட்டுக்காரரோடதான். எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இருக்கு. சரியான நேரத்துல மாலையும் கழுத்துமா நிற்பேன்!l

மை.பாரதிராஜா