இந்த சவுண்ட் பாரின் விலை ரூ.1,99,990இடத்தை அடைக்கும் ஸ்பீக்கர்களுக்கு லீவு விட்டுவிட்டு சவுண்ட் பாரை வீட்டுக்கு அள்ளி வரும் டிஜிட்டல் காலம் இது.

இந்நிலையில் டால்பி அட்மோஸ், 3டி சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய அதிநவீன சவுண்ட் பாரை அறிமுகம் செய்திருக்கிறது ‘சென்ஹெய்ஸர்’ நிறுவனம்.
இதிலுள்ள புது தொழிநுட்பம் ஸ்டீரியோ மற்றும் 5.1 சவுண்டைக் கூட 3டிக்கு மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது.

‘ஆம்பியோ’ என்றழைக்கப்படும் இந்த சவுண்ட் பார், ‘இதற்கு முன்பு இப்படியான ஆடியோ அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்க மாட்டீர்கள்’ என்ற அடைமொழியுடனும் உத்தரவாதத்துடனும் ஜொலிக்கிறது. 13 ஸ்பீக்கர், 6 வூப்பர்கள், 5 டுவீட்டர்ஸ், இரண்டு டாப் ஃபயரிங் ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்களுடன் சேர்ந்து இதை வடிவமைத்திருக்கிறார்கள். ஹோம் தியேட்டர் பிரியர்களின் காஸ்ட்லி சாய்ஸ் இதுதான். ஸ்மார்ட் கன்ட்ரோல் ஆப் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும். விலை ரூ.1,99,990.
                

த.சக்திவேல்