செயற்கை காடு



இதோ தயாராகிவிட்டது இங்கிலாந்தின் முதல் செயற்கை காடு.  200 சதுர மீட்டர் பரப்பளவில், அதாவது டென்னிஸ் கோர்ட் அளவே உள்ள ஒரு குட்டிக் காடு இது. இதில் சுமார் 600 மரங்களை மட்டுமே வைக்க முடியும்.

நகர்ப்புறங்களில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதால் சூழல் சார்ந்து பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது இங்கிலாந்து. இந்தப் பிரச்னையை சமாளிக்க ஆக்ஸ்ஃபோர்டுஷையரில் உள்ள விட்னி என்ற இடத்தில் இந்தக் காட்டை உருவாக்கியிருக்கின்றனர். இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இங்கிலாந்தில் உள்ள பல இடங்களில் குட்டிக் காடுகள் புதிதாக முளைக்கும்.

ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகியின் நுணுக்கங்களைப் பின்பற்றி இந்தக் குட்டிக் காட்டை உருவாக்கியுள்ளனர். ‘‘பார்ப்பதற்கு தானாகவே உருவான காட்டைப் போலவே இருக்கிறது...’’ என்கின்றனர் மக்கள்.

த.சக்திவேல்