மனிதர்களால் உருவான தீவு!



பொதுவாக தீவுகள் கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெடித்து உருவாகும் அல்லது இயற்கையாகவே தோன்றும். இப்படித்தான் உலகிலுள்ள பெரும்பாலான தீவுகள் தோன்றியிருக்கின்றன.

ஆனால், ஹவாய் தீவின் ஹொனோலுலு நகரத்தில் உள்ள ஒரு தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அச்சு அசல் நிஜத்தீவை போல காட்சியளிக்கும் இந்தத் தீவை ஆயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கின்றனர். ஆம்; ஒரு அடுக்குமாடி குடியிருப்பைப் போல கட்டடக்கலைஞர்களில் திட்டமிடுதலால் கட்டமைக்கப்பட்ட தீவு இது.  

இங்கே நீங்கள் மீன் பிடிக்கலாம், ஸ்கூபா டைவிங் செய்யலாம், சர்பிங் விளையாடலாம். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு என்று எந்த சுவடுமே நமக்குத் தெரியாது. தீவைச் சுற்றிலும் விதவிதமான உணவகங்கள் உட்பட ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. பிக்னிக் செல்ல உகந்த இடம் என மக்கள் கொண்டாடுகிறார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்டதால் இதை மேஜிக் தீவு என்றும் அழைக்கின்றனர்.

த.சக்திவேல்