பார்ட்டி... பாய் ஃப்ரெண்ட்...கொரோனா..! ஷிரின் காஞ்ச்வாலா கிறுகிறு!
நாடே கொரோனா ஃபீவரில் படபடக்க... கொஞ்சமும் மிரளாமல் முகத்தில் மாஸ்க் இல்லாமல் மினுமினுக்கிறார் ஷிரின் காஞ்ச்வாலா. ‘வால்டரி’ல் விறைப்பு காட்டும் சிபிராஜை விரட்டி விரட்டி லவ்வின பொண்ணு. சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’வில் அறிமுகமான ஷிரின், ‘வால்டரு’க்கு அடுத்து சந்தானம், விமல் படங்களில் பரபரக்கிறார்.
அதென்ன ஷிரின்..?
ஸ்வீட்னு அர்த்தம். காஞ்ச்வாலாவுக்கு இந்தில கண்ணாடினு அர்த்தம். இன்னொரு சீக்ரெட், ஷிரின், என் பாட்டியோட பெயர். நான் மும்பை பொண்ணு. அப்பா பிசினஸ்மேன். கிளாஸ் பிசினஸ் பண்றார். அண்ணன் துபாய்ல இருக்கார். ஒரே ஒரு தம்பி. க்யூட் ஃபேமிலி.
படிப்புலயும் நான் சுட்டி. ஸ்கூல்ல எப்பவுமே ஃபர்ஸ்ட் வருவேன். ப்ளஸ் டூல 89 பர்சன்டேஜ் வாங்கியிருந்தேன். காலேஜ்ல நயன்டி பர்சன்ட் ஈஸியா எடுத்துடுவேன். நான் படிச்சதெல்லாம் மும்பைலதான்.
காலேஜ் டைம்லதான் ஏர்ஹோஸ்டஸ் ஆகற சான்ஸ் தேடி வந்துச்சு. ஜெட் ஏர்வேஸ்ல விமான பணிப்பெண் ஆனேன். மூணு வருஷம் ஒர்க் பண்ணியிருப்பேன். ஃபிளைட்ல ஆல்மோஸ்ட் எல்லா நாடுகளுக்கும் பறந்திருக்கேன். ஏர்ஹோஸ்டஸா இருக்கும்போதே, மாடலிங்கிலும் ஆர்வம் வந்திடுச்சு. மாடலிங் மூலமா சினிமா வாய்ப்பு ஈஸியாகிடுச்சு.
கன்னடத்துல ‘விராஜ்’ மூலம் அறிமுகமானேன். அதை பார்த்தே, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ மூலமா தமிழுக்கு வந்தேன். முதல் படமே சிவகார்த்திகேயன் சார் தயாரிப்பு. இப்ப தமிழ்ல ரெண்டாவது படமும் (‘வால்டர்’) பண்ணிட்டேன். ஆனா, என்ன... கொரோனாவுக்காக இப்ப மால், தியேட்டர்களை மூடச் சொல்லியிருக்காங்க. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.என்ன சொல்றார் ‘வால்டர்’?சிபி சாரா? சூப்பர். ஸ்பாட்டுல எளிமையா பழகினார். டயலாக்கை பொறுமையா சொல்லிக் கொடுத்தார். நைஸ் பர்சன். ‘வால்டர்’ல ஒர்க் பண்ணினது சந்தோஷமா இருக்கு. நட்டி சார், சமுத்திரக்கனி சாரோட காம்பினேஷன்ல எல்லாம் நடிச்சிருக்கேன். எல்லாருமே நல்லா பழகினாங்க.
மும்பை ஹீரோயின்ஸ்னாலே பார்ட்டி, பாய்ஃப்ரெண்ட் பத்தியெல்லாம் வெளிப்படையா பேசுவாங்களே?
அஸ்குபுஸ்கு! நான் மும்பை பொண்ணுதான். ஆனா, மும்பை ஹீரோயின் இல்லையே! சவுத் இண்டியன் ஃபிலிம்ஸ்தானே நடிக்கறேன். ஆக்சுவலா, எனக்கு பார்ட்டி, பப் கல்ச்சர் பிடிக்காது. எனக்கு பாய் ஃப்ரெண்டும் கிடையாது. உண்மையிலேயே நான் வெரி ஸ்வீட் பர்சன். ரொம்ப சாஃப்ட். எங்க அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பாவும் அப்படித்தான். தவிர ஒரு தம்பி இருக்கறதால, அவனுக்கு நான் ரோல்மாடலா இருக்கணும்னுதான் விரும்பறேன். அதனால பார்ட்டி பக்கம் எல்லாம் தலைகாட்டுறதில்ல.
இன்ஸ்டாவில் ஆக்ட்டிவா இருக்கீங்க போல..?
யெஸ்... யெஸ். கைல எப்பவும் மொபைல் இருக்கறதால டைம் கிடைக்கறப்ப எல்லாம் சோஷியல் மீடியாவுல கொஞ்சம் டைம் பாஸ் பண்ணுவேன். கோலிவுட்ல முதல் படம் பண்ணும்போது, தமிழ் ரசிகர்கள் அத்தனை பேரும் இன்ஸ்டாவில் என்னைப் பாராட்டித் தள்ளிட்டாங்க. என்னாலதான் யாருக்கும் ரிப்ளை பண்ணமுடியாமப் போச்சு. இன்ஸ்டா தவிர டுவிட்டரிலும் அடிக்கடி என்னைப் பார்க்கலாம். ரசிகர்களோட எப்பவும் டச்ல இருக்கணும்னு நினைக்கறேன். அதனாலயே அடிக்கடி செல்ஃபி க்ளிக் பண்ணி, போஸ்ட் பண்றேன்!
மை.பாரதிராஜா
|