Exit poll!



வாக்கு இயந்திரத்தை தேக்கு மரத்தால் செய்தால் கூட, அதற்குள்ளும் ஊழல் புழுக்கள் நெளியும் என்பதை ஒப்புக்கொள்ள
வைக்கிறது கட்டுரையின் வரிகள்.
- ஆர்.ஜெ.சி, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; கீதா, கோவில்பட்டி; கதிரவன், மதுரை.

‘எஸ்’ பேங்கின் பெயர்ப்பலகையிலிருந்து அதை ‘டிக்’ மார்க் வீழ்ந்த பின்பு நடப்பதெல்லாம் ‘டிக்டாக்’ ஷோ பார்ப்பது போல படு தமாஷாக இருக்கிறது.
- இலக்சித், மடிப்பாக்கம்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; யாழினி பர்வதம், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்.

அமெரிக்க தேர்தல் குறித்து ‘குங்குமம்’ ஒரு ‘எக்ஸிட் போலே’ (Exit Poll) நடத்திவிட்டது.
- சந்திரமதி, சென்னை; பிரேமா பாபு, சென்னை; ராஜா தம்பையா, மாம்பலம்; கலிவரதன், கீழ்க்கட்டளை.

‘டேட்டா கார்னர்’ கிளுகிளு தகவல்களையும் பேனர் கட்டி அடிக்கிறதே... பேஷ்... பேஷ்.
- ஜெர்லின், ஆலந்தூர்; மியாவ்சின், கே.கே.நகர்.

பல மருத்துவப் பொறுப்புகளைச் சுமக்கின்ற டாக்டர் மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் போன்ற ஜாம்பவான் மூலம் கொரோனா வைரஸ் குறித்த பயனுள்ள எச்சரிக்கைக் குறிப்புகளைக் கொடுத்தது பாராட்டுக்குரியது.
- கவுரிநாத், பரங்கிமலை; செம்மொழி, சேலையூர்; பப்பு, அசோக் நகர்; கருணாகரன், போரூர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கீதா, கோவில்பட்டி; மனோகரன், கோவை.

தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்கிற பிடிமானம் தமிழக அரசின் கைகளிலிருந்து நழுவிப்போன சூழலில் கேன் வாட்டரை தடை செய்வதென்பது தேர்தலில் எதிரொலிக்கிற சமாச்சாரம் ஆகிவிடும்.
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; பிரேமா, சென்னை; யாழினி பர்வதம், சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள மொபைல் டீ கடை அரசாங்கத்தின் கைகுலுக்கலையும்
பெற்றிருப்பது கூடுதல் பலம்.
- ராஜம் தம்பையா, மாம்பலம்; ஜெர்லின், ஆலந்தூர்; கருணாகரன், போரூர்.

மாரி செல்வராஜ் தனது ‘லவ் ஸ்டோரி’யை ‘காதல் மாரி’யென பொழிந்து தள்ளியதைப் படிக்க சிலுசிலுவென இருந்தது.
- செம்மொழி, சேலையூர்; நிலவழகு, நீலாங்கரை; சக்கு ராம்கி, மடிப்பாக்கம்.

89 வயதாகிற கிளின்ட் ஈஸ்ட்வுட், ‘ஈஸ்ட் ஆர் வெஸ்ட், சினிமா ஈஸ் த பெஸ்ட்’  என்கிற வெற்றி முழக்கத்தோடு ஹாலிவுட்டை வலம் வருவது அடுத்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
- ஜெயராமன், கோவிலம்பாக்கம்; முரளி, நங்கநல்லூர்; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; கதிர், மதுரை.

ரீடர்ஸ் வாய்ஸ்