6,400 உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்!
ஈரானில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குறைந்தபட்சம் 50 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். பத்து நிமிடத்துக்கு ஒருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கின்றனர். என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஈரான்.
அத்துடன் கொரோனாவால் பாதிப்படைந்த நோயாளிகளுக்குசிகிச்சை அளிக்கும் அளவுக்கு அங்கே போதுமான கட்டுமான வசதிகளும் மருத்துவர்களும் இல்லை. இருக்கிற மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் வைத்து சமாளித்துக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஷிரின் ரூகானி என்ற பெண் மருத்துவர் இரவு, பகல் பார்க்காது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரையும் கொரோனா வைரஸ் தொற்றியது. இருந்தாலும் தானும் சிகிச்சை எடுத்துக்கொண்டு நோயாளிகளையும் கவனித்துக்கொண்டார். கொரோனா தாக்கிய 6,400 பேருக்குசிகிச்சை அளித்த ஷிரினும் நோயின் தீவிரத்தால் கடந்த வாரம் மரணமடைந்தார். அவரது தன்னலமற்ற சேவைக்கு ஈரான் மட்டுமல்ல, உலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது.
த.சக்திவேல்
|