தனுஷின் அடுத்தப் படத்தில் மலையாள ரைட்டர்ஸ்!
எஸ்... சத்யஜோதி தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஷர்ஃபூ, சுஹாஸ் ஆகிய இரு ரைட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.‘வரதன்’, ‘வைரஸ்’ ஆகிய மெகா மகா ப்ளாக்பஸ்டர் மலையாளப் படங்களின் ரைட்டர்ஸான இவர்களை தமிழுக்கு அழைத்து வந்திருப்பவர் சாட்சாத் இயக்குநர் கார்த்திக் நரேன்தான்.
‘துருவங்கள் 16’, ‘மாஃபியா: சாப்டர் ஒன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து கார்த்திக் நரேன் டைரக்ட் செய்யும் படம் இது.இவரது இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் முடிந்துவிட்ட ‘நரகாசுரன்’ எப்பொழுது வெளியாகும் என்பது கவுதம் வாசுதேவ் மேனனுக்கே வெளிச்சம்!
காம்ஸ் பாப்பா
|