உளவு பார்க்கும் மொபைல் ரோபோ



இன்று ரோபோட்டிக்ஸ் துறை அசுர வளர்ச்சியடைந்துவிட்டது. இதற்கு உதாரணம்தான் இந்த மொபைல் ரோபோ.

மனிதர்களைப் போல ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தானாகவே செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. தவிர, இதற்கு மனிதர்களுடைய கட்டளைகள் தேவைப்படுவதில்லை. மிகச் சிறிய அளவில் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளைப் போல இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உளவு பார்ப்பதற்கு இந்த வகையான ரோபோக்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். மனிதனால் செய்ய முடியாத ஆபத்தான வேலைகளைக் கூட இதனால் செய்ய முடியும். யாராலும் நுழைய முடியாத இடத்துக்கும் கூட இதனால் நுழைந்து தகவல்களைத் திரட்ட முடியும் என்பது சிறப்பு.

சென்சார் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள் இதனைக் கட்டுப்படுத்துகிறது. தன்னைச் சுற்றியுள்ளவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் வாய்ந்த இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவால் இயங்குகிறது. பீரங்கியின் டிராக்ஸ் அல்லது மனிதக் கால்கள் போன்ற அமைப்பு அல்லது சக்கரங்கள் கொண்டு இது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணமாகிறது.

த.சக்திவேல்