க்யா ரா...கியரா!பாலிவுட்டில் டாப் கியரில் கிடுகிடுக்கிறார் கியரா அத்வானி. சமீபத்தில் ரிலீஸான அக்‌ஷய்குமாரின் ‘குட்நியூஸி’ல் கியராவுக்கு சூப்பர் நேம். இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘லட்சும் பாம்’ படத்திலும் நடித்து முடித்து விட்டார்.
இது தமிழ் ‘காஞ்சனா’வின் ரீமேக். தமிழில் லட்சுமி ராய் (ராய் லட்சுமி என்று சொல்ல வேண்டுமா?!) நடித்த வேடத்தை இந்தியில் ஏற்றிருக்கிறார் கியரா!அத்துடன் நெட்ஃபிளிக்ஸ் படமான ‘கில்டி’யிலும் பிச்சு உதறியிருக்கிறார். இந்த ‘கில்டி’ டாப்ஸியின் ‘பிங்க்’ போல ஒரு கதை என்கிறார்கள். அதாவது ‘நேர்கொண்ட பார்வை’!

மை.பா