காதலியைத் தேடும் புலிசமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் பகிர்ந்த ஒரு டுவிட்தான் இணையத்தில் ஹாட் வைரல்.

அவர் பகிர்ந்தது ஒரு புலியின் காதல் கதையை!
பொதுவாக பறவைகளும் விலங்குகளும் பருவநிலை மாறும் போது தங்களுக்கு உகந்த இடத்தைக் கண்டுபிடித்து அங்கேயே ஒரு துணையையும் தேடிக்கொள்ளும். ஆனால், இந்தியக் காடுகளில் வாழ்ந்து வந்த ஒரு புலிக்கோ சரியான துணை கிடைக்கவில்லை. துணையைத் தேடி காடு, மலை என 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறது அந்தப் புலி.

அப்போதும் கூட அதற்கு ஒரு காதலி கிடைக்கவில்லை. இரவில் மட்டுமே நடைபயணம் மேற்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் ஓய்வெடுத்துள்ளது. வழியில் யாருக்கும் எந்தச் சிரமத்தையும் கொடுக்கவில்லை. புலியின் ஒவ்வொரு நடவடிக்கையும் வனத்துறையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காதல் புலிக்கு உகந்த ஜோடி கிடைக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் பிரார்த்தனை  கமெண்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

த.சக்திவேல்