தேனீ தேங்க்ஸ்!



ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் ஆங்காங்கே அம்சமாய் வைத்து ‘நியூஸ் சாண்ட்விச்’சை அளித்த விதம் கூடுதல் சுவை.
- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; ஆசிகா, வியாசர்பாடி; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

ஸ்ருதிஹாசனின் பளிச் பளிச் பதில்களில் அப்பா வின் நேர்த்தி தெரிகிறது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; கவுரிநாத், பரங்கிமலை; கதிர், கோவை; பப்பு, அசோக் நகர்; மனோகர், மேட்டுப்பாளையம்.

சீரியல் தொடர்களிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து மக்கள் சிந்தையில் ஆழமான இடம்பிடித்த ‘சித்தி’ சீரியலின் பார்ட் 2 பற்றிய கட்டுரை சூப்பர்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; சக்கு ராம்கி, மடிப்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ராஜம் தம்பையா, மாம்பலம்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; செம்மொழி, சேலையூர்.

கே.பி. என்னும் திரை பிரமாண்டத்தின் மருமகள் சினிமாவில் நுழைவதைப் பார்க்கும்போது, அந்த கே.பி. சாரே ‘மறு பிரவேசம்’ செய்வதைப் போலுள்ளது.
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மியாவ்சின், கே.கே.நகர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பிரேமா குரு, சென்னை; சந்திரமதி, சென்னை.

தீப்பந்தம் காட்டி தேனீக்களை அழிக்காமல் தேன்கூட்டை லாவகமாக அகற்றும் முறையை அறிமுகப்படுத்தி அசத்தி வரும் சுதந்திரச்செல்வனுக்கு தேனீக்கள் சார்பாக நன்றிகள்.
- கீதா, கோவில்பட்டி; மனோகரன், கோவை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆர்.ஜெ.சி, சென்னை; கருணாகரன், போரூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; இலக்சித், மடிப்பாக்கம்; நிலவழகு, நீலாங்கரை.

வசந்திதேவியின் வாழ்வுப் பயணத்தில் அவர் கடந்து வந்த மைல் கற்கள் ஃபைலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை.
- கருணாகரன், போரூர்; குருசாமி, கழுகுமலை; சக்ரபாணி, திண்டுக்கல்; பிரேமா, சென்னை; வேலு, உள்ளகரம்; கணேசன், அசோக் நகர்.

பெப்பர் ரோபோ போல மனிதனுக்குத் துணையாக இருக்கும் அறிவியல் முன்னேற்றத்தைக் ‘குங்குமம்’ வாயிலாக அறிய முடிந்தது.
- இராம. கண்ணன், திருநெல்வேலி; தா.சைமன் தேவா, விநாயகபுரம்;  கெங்குராஜ், அரக்கோணம்; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.

மல்லர் கம்பம் விளையாட்டை முதல் முறையாக அறிந்தோம். மாற்றுத்திறனாளிகளின் மல்லர் கம்பம் மலைக்க வைத்தது. ஆதித்யன் அவர்களின் முயற்சிகள் கட்டாயம் வெற்றியடையும்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; பிரேமா குரு, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்.

ரீடர்ஸ் வாய்ஸ்