COFFEE TABLE



ப்ளூடூத் ஹெட்போன்

‘ஹானர்’ நிறுவனம் மலிவு விலையில் நவீனமான ப்ளூடூத் ஹெட்போனை களமிறக்கியிருக்கிறது. ‘ஹானர் ஸ்போர்ட்’ என்பது இதன் பெயர். 137 mAh திறன்கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 11 மணி நேரத்துக்கு இடைவிடாமல் இசையை ரசிக்கலாம். தவிர, ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இதை கனெக்ட் செய்துகொள்ள முடியும் என்பது சிறப்பு. விலை. ரூ.1,999.

பெண்டு நிமிர்த்தும் பேபி

இன்ஸ்டாவில் போட்டோ ஷூட்ஸாக அள்ளித் தெளிக்கிறார் ‘தமிழ்ப்படம் 2’ ஐஸ்வர்யா மேனன். இப்போது ஹிப்ஹாப் ஆதியின் படத்தில் பரபரப்பவர் சமீபத்தில் ஃபிட்னஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டிராக்டர் டயரை, லாவகமாக பெண்டு நிமிர்த்தும் ஒர்க் அவுட்டில் பிச்சு உதறுகிறார் ஐஸ். பேபியின் வீரதீர ஒர்க் அவுட்டிற்கு மூன்று லட்சம் ஹார்ட்டின்ஸ் குவிந்துவிட்டன.

சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் இந்தியப் பெண்கள்

‘‘இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள்தான் வீட்டு வேலை, சமையல், குழந்தைகளைக் கவனித்தல் உட்பட பல வேலைகளைச் செய்கின்றனர்.
இதற்காக எந்த சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படி சம்பளம் வழங்கினால் அது ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் டர்ன் ஓவரை விட 43 மடங்கு அதிகமாக இருக்கும்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு.

தினமும் நகரங்களில் வசிக்கும் பெண்கள் 312 நிமிடங்களும், கிராமங்களில் வசிக்கும் பெண்கள் 291 நிமிடங்களும் சம்பளம் வாங்காத வேலையைச் செய்கின்றனர்.ஆனால், தினமும் நகரத்தில் வசிக்கும் ஆண்கள் 29 நிமிடங்களும், கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் 32 நிமிடங்களும்தான் சம்பளம் வாங்காத வேலையைச் செய்கின்றனர்.

வைரல் சன்

ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் மிகைல் ஃப்ரிட்மேன். அவரது சொத்து மதிப்பு 13.7 பில்லியன் டாலர். அதாவது 97 ஆயிரம் கோடி ரூபாய். இவரது மகனான அலெக்ஸாண்டர் ஃப்ரிட்மேன்தான் இணையத்தில் இப்போது ஹாட் டாக்.

மாஸ்கோவின் ஒதுக்குப்புறத்தில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு பிளாட்டில் வசித்துவருகிறார் அலெக்ஸாண்டர். அதுவும் வாடகைக்கு. அப்பாவின் உதவியின்றி சொந்தமாக பிசினஸ் செய்து வருவதால் வைரலாகிவிட்டார் அலெக்ஸாண்டர்.

இமானுக்கு லைக்ஸ்

‘இமான் கம்போஸர்’ என்ற பெயரில் யூ டியூப்பிலும் கலக்குகிறார் இசையமைப்பாளர் டி.இமான். ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் ஸ்ரேயா கோஷலை ‘மைலாஞ்சி...’ பாட வைத்தது முதல் சில பாடல்களின் மேக்கிங் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். வீடியோவைப் பார்த்து ரசித்த பலரும், ‘‘இவ்வளவு வெளிப்படையாக யாரும் ரெக்கார்டிங்குகளை காண்பித்ததில்லை...’’ என இமானுக்கு ‘கங்கிராட்ஸ்’ பொக்கேக்களை நீட்டி வருகின்றனர்.  இதில் ‘மைலாஞ்சி’ மேக்கிங், 14 லட்சம் வியூஸ்களை அள்ளியிருக்கிறது.

குங்குமம் டீம்