COFFEE TABLE



ப்ளூ பெர்ரி

பாலிவுட், டோலிவுட்டில் மட்டும் க்ளாமராக ரவுசு கட்டிய ரகுல் ப்ரீத்சிங், இன்ஸ்டாவில் ஃபிட்னஸ் ஃப்ரீக்காக ஜிம்னாஸ்டிக் போஸ்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் டீப் ப்ளூ ஸீ கரையோரம் ப்ளூ பிகினி போஸில் அசத்தலாக நின்றதுடன், அந்த குளுகுளு மொமன்ட்டை இன்ஸ்டாவிலும் தட்டிவிட்டார் ரகுல். உடனே 13 லட்சம் ஹார்ட்டின்கள் குவிந்துவிட்டன.

மியூசிக்கல் லேம்ப்

பார்த்தவுடன் ரீடிங் லேம்ப்பை போல காட்சிதரும் இந்த எல்இடி விளக்கு ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர். ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டு விரும்பிய இசையைத் துல்லியமாக இதில் கேட்கலாம். தவிர, போனுக்கு வரும் கால்களையும் இதன் மூலமாகவே அட்டண்ட் செய்ய முடியும். இதுபோக எல்இடி விளக்காகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஐந்து விதமான வண்ணங்களில் ஒளிர்ந்து புத்துணர்வூட்டுகிறது இந்த மியூசிக்கல் லேம்ப்.

எரிமலை திருமணம்

பிலிப்பைன்ஸில் உள்ள டால் எரிமலை வெடித்து சாம்பல் புகை விண்ணை நோக்கி பறந்தது. எரிமலை வெடிப்பால் கதிர் வீச்சு அபாயம் இருக்குமென்று 14 கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் இருக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த ஆபத்தை பொருட்படுத்தாமல் சீனோ வாஃப்ளரும் கட் பாடிஸ்டாவும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆம்; பின்னணியில் எரிமலை சாம்பல் புகை தெறிக்க, புது தம்பதிகள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்!
எரிமலைக்கும் அவர்களுக்குமான இடைவெளி 10 கிலோ மீட்டர்தான்!

நண்பேண்டா

இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் அவர்கள் பகிர்ந்த ஒரு வீடியோதான் டுவிட்டரில் ஹாட் டாக். பெயர் தெரியாத ஒரு சாலை. அதில் ஐந்து வயதைக் கூட தாண்டாத ஒரு சிறுவன் நடந்து வருகிறான். அவனைப் பின்தொடர்ந்து ஒரு முள்ளம்பன்றியும் வருகிறது. சிறுவன் போகும் இடங்களுக்கெல்லாம் அந்த முள்ளம்பன்றியும் செல்கிறது. இருவருக்கும் இடையிலான நட்பைப் பார்த்து இணையமே நெகிழ்ச்சியில் கசிந்து உருகுகிறது.

லிட்டில் ஏஞ்சல்ஸ்

மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவும், ‘தோழா’ இயக்குநர் வம்சி பைடபள்ளியின் மகள் ஆத்யாவும் நெருங்கிய தோழிகள். இந்த லிட்டில் ஏஞ்சல்ஸ் இருவரும் தொகுப்பாளராக கலக்கி வரும் ‘ஆத்யா & சித்தாரா’ என்ற யூ டியூப் சேனல் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களை நெருங்கிவிட்டது!சமீபத்தில் மகேஷ் பாபுவின் ‘சரிலேரு நீக்கெவரு’வின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவைப் பேட்டி கண்டு அசத்திவிட்டனர் இந்த சுட்டீஸ்.                            

குங்குமம் டீம்