Rapid Fire!



ராஷ்மிகா மந்தனாவுக்கு ஒரு கூடை பொக்கே நீட்டுகிறது டோலிவுட். அங்கே ஸ்வீட் பொங்கல் கொண்டாடிய மகேஷ்பாபுவின் ‘சரிலேறு நீகேவ்வாரு’வில் துறுதுறுவென ஸ்கோர் அள்ளிய கொஞ்சல் பேபி. விஜய தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’டுக்குப் பிறகு இப்போது தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தானி’ல் நடித்து வருகிறார்.

பொது இடத்துல யாரையாவது அறைஞ்சது உண்டா?
யெஸ்! ஷூட்டிங்ல நடந்திருக்கு! ஆனா, அது ஒரு சீனுக்கானது!

கடைசியா டேட்டிங் பண்ணினது எப்ப..?
டேட்டிங்கா? வாய்ப்பே இல்ல. சில வருஷங்களா
சிங்கிளாதான் இருக்கேன்.

அடிக்கடி பயன்படுத்தும் App..?
இன்ஸ்டாகிராம்!

முதல் பிரேக் அப்..?
வந்ததே இல்ல. ஏன்னா நான் லவ் பண்ணினது எல்லாமே ஒன்சைட்! ஒருத்தரும் என்னை விரும்பினதில்ல!

முதல் பாராட்டு..?
ஸ்கூல் படிக்கும் போது, ஸ்டேஜ்ல என் டான்ஸ் பர்ஃபாமென்ஸ் பார்த்துட்டு அத்தனை பேரும் பாராட்டினாங்க!

எமோஷனலா பார்த்த ஒரு தமிழ்ப் படம்..?
அருவி

எந்தத் தருணம் மீண்டும் நிகழணும்னு விரும்புவீங்க?
‘மிஸ் ஃப்ரெஷ் ஃபேஸ்’ பட்டம் வென்ற மொமன்ட்!

பிடிச்ச கார்ட்டூன் கேரக்டர்?
I’m a huge Anime freak. அனிமே, ஜப்பானிய கார்ட்டூன் கேரக்டர். ஷூட்டிங் இல்லாதப்ப பார்த்து ரசிப்பேன்.

ஒரு குட் ஹேபிட்..?
Be a Miracle...

‘இந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டோமே... நாம நடிச்சிருக்கலாமே’னு தோண வச்ச படம்?
ரெண்டு படங்கள். ஒண்ணு ‘சூப்பர் டீலக்ஸ்’. இன்னொண்ணு ‘மெர்சல்’.

மொபைல் கேலரில எத்தனை புகைப்படங்கள் இருக்கு?
வெயிட், செக் பண்ணிடுறேன்... 4001 போட்டோஸ்!

ஏதாவது ஒரு விஷயம் திருட்டுத்தனமா பண்ணினதுண்டா?
ஒருமுறை சூப்பர் மார்க்கெட்ல ஒரு ஆரஞ்சு பழம் திருடியிருக்கேன். அப்புறம், மனசு கேட்காம அதை எடுத்த இடத்துலயே வச்சிட்டேன்!

‘இந்த குணத்தை கண்டிப்பா மாத்தியே ஆகணும்’னு எதை நினைக்கறீங்க..?
Caring too much..! ஒருத்தர் மேல அன்பு வச்சா, அசைக்க முடியாத அன்பா வச்சிடறேன்..!

சமீபத்துல பார்த்த தமிழ்ப்படங்கள்..?
‘சர்கார்’, ‘மாரி 2’னு நிறைய இருக்கு.

தமிழ்ல பிடிச்ச ஹீரோயின்ஸ்..?
லிஸ்ட்டே இருக்கு. சமந்தா மேம், நயன்தாரா மேம், த்ரிஷா மேம்...l

மை.பாரதிராஜா