facebook வலைப்பேச்சு



தூக்கியெறிந்து பேசுகிறீர்கள். எனக்கு ஒன்றுமில்லை. உங்கள் சொற்களுக்கு காயம் படாமல் இருந்தால் சரி.
- ராஜாசந்திரசேகர்

தசாவதாரம்’ படத்தில் எபோலா நோயின் தாக்கத்தைப் பற்றி கமல் எச்சரிக்கை செய்ததாக ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் செய்திகளைப் பகிர்கிறார்கள். இது நல்ல விஷயம். மகத்தான அறிவியல் கண்டு பிடிப்பில் தமிழர்கள் உலகத்தில் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.‘கலையரசி’ படத்தில் எம்ஜிஆரும், பானுமதியும் ‘மங்கள்யான்’ பற்றியும், ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து எப்படி பத்திரமாகத் தரையிறங்குவது என்பது பற்றியும் முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள்.

 ‘உலகம் சுற்றும் வாலிபனி’ல் விஞ்ஞானி எம்.ஜி.ஆர். மின்னலைப் பிடித்து கேப்ஸ்யூலில் அடைத்து வைத்தார். இப்போதுதான் இஸ்ரேல் விஞ்ஞானிகள் அது சாத்தியமா என்ற ஆராய்ச்சி யையே ஆரம்பித்துள்ளார்கள்.ஜெய்சங்கர் படங்களில் வரும் வில்லன்களில் பலர் பயோ ஆயுதங்களின் ஆபத்தைப் பற்றி அன்றே சொல்லிவிட்டார்கள்.
- விநாயக முருகன்

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்.
  #ஆமாங்க ... வரலாற்றுத் தவறாகி விடும். குடுத்திடுங்க!
- வாசு முருகவேல்

லஞ்சத்தை நாம் ஏன் வெறுக்கிறோம் என்றால், நமக்கு சரியான ஆளிடம் லஞ்சம் கொடுக்கத் தெரிவதில்லை.
- அராத்து

அம்மாவுக்கு ரஜினி வாழ்த்து! ‘அம்மா... நான் ஒண்ணுமே சொல்லலை. பி.ஜே.பி அவங்களாத்தான் ஏதோ சொன்னாங்க. அதுக்கு நான் பொறுப்பில்லை. என்ன விட்ருங்கம்மா’ என்பதைத்தான் இப்படிச் சொல்லி
யிருப்பாரோ!
 #டவுட்டு- ஜோதிமணி சென்னிமலை

என்னாது? 193 பேரா... காந்தி விடுதலைப் போராட்டத்திலே உள்ளே போனப்பகூட இத்தனை பேரு சாகலையே. என்னய்யா நடக்குது இங்கே?
- பாண்டியன் புயல்

மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாள்கிறார்கள். ஒன்று, ஃபேஸ்புக்கில் மழைக் கவிதை எழுதுகிறார்கள்; மற்றொன்று, ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.
- ஈரோடு கதிர்

ஒளிந்து விளையாடிய
குழந்தைகள்
அகன்றபின்
கூரையின் பாரம்
அழுத்துவதை
மீள உணர்கின்றன
கோயில்
பிரகாரத் தூண்கள்
- கலாப்ரியா

கல் திரள் மனதை
கரைத்துக் கொண்டிருக்கிறது
இம் மாமழை...
- கடங்கநேரி யான்

அளவிற்கு அதிகமாய் கிடைக்கும்போது எதற்கும் வேல்யூ இருக்காது போல.... மழையாய் இருந்தாலும், அன்பாய் இருந்தாலும்!
- ஷர்மிளா ராஜசேகர்

twitter வலைப்பேச்சு

@writernaayon 
கொசு இருக்கறதென்னவோ வீட்டுலதான், கார்ப்பரேஷன்காரங்க ரோட்டுல புகைய போட்டுட்டுப் போறாங்க, ரோட்டுல படுத்துக்கச் சொல்றாங்களோ!

@vandavaalam
வெகுதூரம் தெரியும் பச்சை நிற டிராபிக் சிக்னல், பக்கத்தில் சென்றதும் சிவப்பாகிவிடும்! இதுதான் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’!

@nithyalaji
ஞாபகம் வைப்பது மூளை உள்ளவர்களுக்கு சுலபம்! மறப்பதுதான் இதயம் உள்ளவர்க்கு கடினம்!

@Elanthenral   
இருபத்தஞ்சாயிரம் ரூபா பீச வாங்கிட்டு, ‘‘உங்க பிள்ளை ஏன் சரியா படிக்கிறதில்ல’’ன்னு பள்ளி நிர்வாகம் நம்மகிட்ட கேக்கும் பாருங்க ஒரு கேள்வி!

@raajaacs   
எண்ணத்தில் மொய்க்கும் ஈக்களை எப்படி விரட்டி அடிக்க?

@kattathora   
டபுள் மீனிங்கில் சொல்லப்படும் விஷயங்களில், இரண்டாவது மீனிங்கே முதலில் புரிந்து கொள்ளப்படுகிறது...

@8appan
எதிரிக்கும் துரோகிக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லியாச்சு... எதிரி, என்னைக் காதலிக்காத பொண்ணு; துரோகி, என்னைக் காதலிச்சிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ண பொண்ணு!

@SettuSays   
Serpent egg என்னனு கேட்டா பாம்பு மாத்திரையாம்! ‘பேரென்ன?’ ‘சின்னா...’ ‘சின்னா இல்லை, பிரேம்குமார்’ மொமன்ட் ;)

@Aruns212   
மாதச் சம்பளம் இரண்டு பாடல்களில் அடங்கி விடுகிறது.
மாதக் கடைசியில்: ‘வாராய்... நீ வாராய்!’
மாதத்தின் முதல் வாரத்தில்: ‘போகுதே... போகுதே!’

@naiyandi 
மிஸ்டு கால் செய்பவர்களிடமும், அறிவுரை சொல்பவர்களிடமும் கட்டணம் வசூலித்தால்... இந்தியா ஒரே நாளில் வல்லரசு ஆகிவிடும்!

@writer_raghu   
ஒரு காலத்தில் வெட்கப்பட்டு வெளிப்படையாகச் சொல்லாமல் தவிர்த்த மூன்று வார்த்தைகள் இன்று கடமைக்கு சொல்லப்படுகின்றன... தேங்க் யூ, ஸாரி, ஐ லவ் யு!

@kasaayam
 எந்தக் கப்பல் செய்து கொடுத்தாலும், அதை நீர்மூழ்கிக் கப்பலாக மாற்றி விடுகிறாள் மகள்.

@Noorul_tweets 
வகுப்புக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு - உளவுத்துறை எச்சரிக்கை # எல்லார்க்கும் லீவு விட்டு 10, 12வதுக்கு மட்டும் ஸ்கூல் வச்சா ஏன்டா நடக்காது?