உயிர் இருட்டு
‘‘என்னா சார்?” என்றான் மறுமுனையில் கருமாரி தாசன். ‘‘தம்பி சுத்தமா ஜெனரேட்டர் வேலை செய்யலை. ராத்திரி பூரா தூக்கம் இல்லை...’’ ‘‘என்னா சார் பண்ண சொல்றே?’’ ‘‘பொண்ணு வேற கர்ப்பமா இருக்கா. அவ நிம்மதியா தூங்க வேண்டாமா?’’ ‘‘சென்டிமென்டை அவுத்து விடாத சார். துட்டு வச்சிருக்கியா?’’ ‘‘எவ்வளவு?”
 ‘‘நாட்டு நிலைமை தெரியாத மாதிரியே பேசுற ஐயரே...” ‘‘பத்தாயிரம் இருக்கு...’’ ‘‘அட அந்த கலர் பேப்பர் எல்லாம் எவனுக்கு வேண்டும். தங்கம் கீதா?” ‘‘ஒரு பவுன் இருக்கும்...’’ ‘‘அதை எடுத்துக்கினு சரியா ஆறு மணிக்கு பைலட் தியேட்டர் பக்கத்து சந்தாண்டை வா. வேற எவனையும் இட்டானுந்திராதே...” சொல்லி விட்டு கத்தரித்தி விட்டான்.
திரும்பி மனைவியைப் பார்த்தார். ‘‘என்னன்னா சொல்றான்?” ‘‘ஆறு மணிக்குத்தான் கிடைக்குமாம். ஒரு பவுன் கேட்கறான்...’’ ‘‘அழுங்க...’’ என்றாள் மனைவி. ‘‘இருட்டிடும். பயமாத்தான் இருக்கு...’’ ‘அம்மா’ என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் கர்ப்பமாய் இருந்த மகள். ‘‘இதோ வர்றேம்மா...’’
அவர் மனம் ஒரு நிலையில் இல்லை. எப்படா மாலை வரும் என்றே மனம் பித்துக் கெட்டு எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது. இருட்டு அவர்களைத் தின்னத் தொடங்கியது. சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். அங்கங்கே புகைந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் யாரும் இருக்கிறார்களா? கதவு வெளியில் பூட்டப் பட்டிருந்தது.
ஆமாம். எல்லோரும் பூட்டிக்கொண்டுதான் உள்ளே இருக்கிறார்கள். கலவரம் ஆரம்பித்ததிலிருந்தே பல வீடுகளில் வெளியில் பூட்டுகள் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பின்கதவும் அடைத்து உள்ளே க்ரில் கதவும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றுதான் தெரியவில்லை.இருபது நாட்கள் விளையாட்டு போல் கடந்து விட்டன. இடிந்த சர்ச்சுகள், கோயில்கள், மசூதி... எங்கும் அழுகுரல்கள். அடித்தட்டு மக்களின் அழுகைக் குரல்கள்.சைக்கிள் பல நாட்கள் சாலையைப் பார்க்காததால் செயின் இழுக்க சப்தம் போட்டது.
மிதித்து லஸ் கடந்தார். ஒன்றிரண்டு பேர் ரோட்டில் வம்புக்கு காத்திருப்பது போலவே நின்றிருந்தார்கள். மெல்ல கடந்தார். இருட்டத் துவங்கி விட்டது. சைக்கிளில் லைட்டும் இல்லை. இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஒரு வாகனமும் காணோம். எங்கோ விசில் சப்தம். காதை எட்டி பயமுறுத்தியது.
அமைதி குலைந்த சென்னை. இரண்டு மாதம் முன்பு இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எப்போதாவது கைப்பேசி சிக்னல் மட்டும். தொலைக்காட்சி எதுவும் இல்லை. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வீட்டின் உள் சவமாய் புதைந்திருந்த மக்கள். பைலட் தியேட்டர் அடைந்து சந்து முனையில் நின்றார். பத்துப் பதினைந்து நிமிடம் கடந்திருக்கும்.இருட்டில் சந்தின் மறுபக்கத்தில் இருந்து ஓர் உருவம் திப்பியாய் நுழைந்தது.அவனாகத்தான் இருக்கும்.
அருகில் வந்தவன், கையில் இருந்த நீண்ட பையை அவர் கையில் கொடுத்துவிட்டு, நகையை வாங்கிக்கொண்டு சடுதியில் காணாமல் போனான், எந்தவித உரையாடலும் இல்லாமல்.உள்ளே ஒரு டின் இருந்தது. பையை ஹாண்டில் பாரில் கட்டிக்கொண்டு மிதிக்க ஆரம்பிக்க -இருட்டு லேசாய் பயமுறுத்தியது.‘விர்’ரென்று கடந்தது ஏதோ ஒரு வாகனம், உரசித் தள்ளாத குறையாக. லாயிட்ஸ் ரோடு கடந்து விட்டார்.
‘‘ஹேய் நில்லு...’’ என்று ஒரு குரல். சைக்கிளை நிறுத்தாமல் வேகமாய் மிதித்தார். ‘‘ஹேய் நில்லுடா...’’ யாரோ ஓடி வருவதும் சைக்கிளின் கேரியரைப் பிடித்து இழுப்பதும் தெரிந்தது. தடுமாறி சைக்கிளைப் போட்டு விழுந்தார். ‘‘எழுந்திருடா...’’ இருளில் சுற்றி நின்றவர்களின் உடையில் சிவப்பு தெரிந்தது. ‘‘யார்டா நீ?’’
‘‘பொண்ணு கர்ப்பமாயிருக்கு. மினி ஜெனரேட்டருக்கு டீசல் வாங்க வந்தேன்...’’ ‘‘ஓ...’’ என்ற ஒருவன் கீழே விழுந்திருந்த பையை அவர் எடுக்கும் முன் எடுத்தான். ‘‘பேரென்ன?” ‘‘மாதவன்...’’ ‘‘ஐயரா?” ‘‘இல்லை, ஐயங்காரு...’’ ‘‘தோடா...’’ என்று ஒருவன் முகத்தில் டார்ச்சை அடித்தான்.
பாழ் நெற்றி. ‘‘மாமு... பொய் சொல்றான்டா...’’ என்றான் டார்ச் அடித்தவன். ‘‘சத்தியமா நான் ஐயங்கார்தான்...” ஒருத்தன் அவர் முதுகில் கை வைத்தான். ‘‘என்னா பொய் சொல்றான் பாரு... பூணூலும் காணோம்...’’ ‘‘நம்ம கிட்ட மாட்டினதும் ஐயரு தயிருன்னு சொல்லி தப்பிக்க பார்க்கிறான்டா. சீவிட வேண்டியதுதான்...’’ இருட்டில் ஒருத்தன் சொல்ல மெல்லிய பயம் எழுந்தது.
‘‘என்ன சொன்னா நீங்க நம்புவேள்...’’ என்றவர் காயத்ரி சொல்ல ஆரம்பித்தார். ‘ஓம் பூர் புவசுவ...’ ஒருவன் வாயைப் பொத்தினான். ‘‘இதுவும் கத்து வச்சிருக்கியா?’’ ‘‘மச்சான்... ஷோக்கா ட்ராமா போடறான் பாரு...’’ முதலில் டார்ச் அடித்தவன் மீண்டும் முகத்தில் டார்ச் அடித்தான். நெற்றிக்கு அருகில் வைத்தான். ‘‘என்னா... பொய் பார்த்தியா... நமாஸ் மார்க்...’’ ‘‘ஐயையோ... அது எனக்கு சின்ன வயசுல ஏற்பட்ட தீக்காயம்...’’
‘‘சர்தான் மாமு... நம்ம கிட்டயிருந்து தப்பிக்க என்ன எல்லாம் சொல்றான் பாரு... உங்களுக்குதான் ஓட நேரம் கொடுத்தோம் இல்லே... என்ன பண்றே இங்கே?’’ ‘‘சத்தியமா நான் ப்ராமின்தான். மைலாப்பூர்லதான் எங்க வீடு. மூணு பரம்பரையா?’’ ‘‘பொய் சொல்றான்டா... பூணூலும் காணோம்... நெத்தியும் பாழா இருக்கு. ப்ராமின் வேஷம் போடறான் பாரு...’’ ஒருத்தன் ‘‘ஜெய ஜெயகே மகிஷாசுர மர்த்தினி...’’ என்றான். அவருக்கு திகில் ஆனது.
‘‘மாமு அவத்துப் பார்றா...’’ டார்ச் கீழே போனது. ஒருவன் பலவந்தமாய் பேண்டை உருவினான். ‘‘ஐயோ என்னை அசிங்கப் படுத்தாதீங்கோ...” ஒருவன் ஜட்டியும் கழட்டி விட்டான். ‘‘மாமு சுன்னத் பண்ணியிருக்கான்டா...”
‘‘கடவுளே எனக்கு சதை வளந்து ப்ராப்ளம் இருந்தது. சர்கம்சிஷன் பண்ணியிருக்கேன். அம்பாளே காப்பாத்து...’’ ஒருவன் ‘பொடுக்’கென்று வாயில் குத்தினான். ‘‘என்னடா அம்பாளைக் கூப்பிடறே..?” ‘‘நம்புங்கோ. உங்க கால்ல வேணும்னாலும் விழறேன். என் வீட்டுக்கு வந்து பாருங்கோ...’’ ‘‘பொய் மேலே பொய் சொல்லிட்டே போறே நீ...’’ ஒருவன் பொளேரென்று அறைந்தான்.
தட்டுத் தடுமாறி கீழே விழுந்து -கன்னத்தைப் பிடித்துக் கொண்டே கதறினார். ‘‘சத்தியமா நான் ஐயங்கார்தான்...’’ ‘‘நீ ஐயங்காரா..?’’ என்று ஒருவன் மிதித்தான். ‘‘எங்களை எல்லாம் ஒரு தடவை பார்த்துக்க...’’ என்ற படியே ஒருவன் எல்லோருடைய முகத்திலும் டார்ச் லைட்டை அடித்துக் காண்பித்தான். நெற்றியில் முழுக்க குங்குமம். முகத்தில் வெறிக்களை தாண்டவம் ஆடியது.
அவர் எழ முயன்றபோது ஒருவன் டீசல் டின்னை அவர் மீது கவிழ்த்தான்.இன்னொருவன் லைட்டரை ‘க்ளிக்’ என்று அழுத்தினான்.
நெகிழ்ந்த ஸ்ருதி!
புத்தாண்டில் புதுப்பொலிவுடன் ஜொலிஜொலிக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் விழா ஒன்றில் பாலிவுட் தபு, ராதிகா சரத்குமார் இருவரையும் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார் ஸ்ருதி. ‘‘Awesome Sunday running into these two incredible and inspiring ladies...’’ என நெகிழ்ந்திருக்கிறார். ராதிகாவும் அப்படித்தான். ‘‘இந்த சந்திப்பில் என்னால சிரிப்பை அடக்க முடியல. லவ்லி ஈவ்னிங்...’’ என்கிறார் ராதிகா.
சமந்தாவின் இதயம்!
சமீபத்தில் சென்னையில் நடந்த விழா ஒன்றிற்கு செம ஹாட்டான காஸ்ட்யூமில் வந்து அசத்தியிருக்கிறார் சமந்தா. அதுவல்ல விஷயம். தனது பிரதிக்ஷா ஃபவுண்டேஷன் சார்பில் இதய நோயால் பாதித்த நூறு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து, அவர்களை குணப்படுத்தியிருக்கிறார். ‘‘இத்தனை பேரை காப்பாத்தினதுல சந்தோஷம்னாலும், நோய் வரும்முன் காப்பதுதான் சிறந்ததா நினைக்கறேன்...’’ என்கிறார் சிரித்துக் கொண்டே!
சுப்ரஜா
|