நீங்க நமீதாவுக்கு petஆ?!
-ரீடர்ஸ் வாய்ஸ்
காதல் கோதாவில் ஜெய், பிரணிதாவின் ஹிஸ்டரியை மிஞ்சும் கெமிஸ்ட்ரி அள்ளுது தலைவா! - ஆர்.மனிஷ்நிதின், கோவை.
 ஸ்டார்ஸ் பெட் அனிமல்ஸ் பக்கங்கள் ரியலி சூப்பர்.. அதென்ன பாஸ் நமீதா ஸ்டில் மட்டும் முழுப்பக்கம்... நீங்க நமீதாவுக்கு பெட்டா? - விஜயநிர்மலன், சென்னை - 25
‘ரிச்சி ஸ்ட்ரீட்’டின் விஸ்வரூப பிசினஸ் அம்மாடியோவ்... அறியாத செய்தியிலும் அட்டகாசம். - கா.கிருஷ்ணவேணி, திருநெல்வேலி.
தமிழுணர்வுக்கு தோள் கொடுக்கும் சிம்மக் குரல் தேனிசை செல்லப்பாவைப் பற்றி யுகபாரதியின் சொற்கள் நெஞ்சைத் தொட்டன. - கே.ரவிசியாமளா, மதுரை.
ஷாலினி விசாகனின் மாற்றுத் திறனாளிகளுக்கான உடை, இதுவரை யாருமே யோசிக்காத யுனிக் அமேசிங் ஐடியா! - எஸ்.கே.கந்தவேலன், திருப்பூர்.
சுமீத் சங்கவியின் ஷூட்டிங் பயிற்சி மையம் அசத்தல். மனம் உடல் இரண்டையும் வளப்படுத்தும் இப்பயிற்சிகளை அரசே மாணவர்களுக்கு வழங்கலாமே! - ஏ.ப்ரீதா, நாகர்கோயில்.
சஞ்சிதாவின் கிறுகிறு கிளாமர் விருந்து சொக்க வைக்கும்போது தலைப்பு ‘ரம்’னு இருக்கிறதுல என்ன பாஸ் தப்பு? - பி.ஜனார்த்தனன், வேலூர்.
டெஸர்ட் சஃபாரிக்கான முன் தயாரிப்பே டன் கணக்கில் திகிலேற்றுதே! அதிலும் தில்லாக பெண்கள் இதில் ஈடுபடுவது கிளாசிக் ஹிஸ்டரி. - எம்.மஞ்சுளாரதி, சென்னை - 4.
வழக்குரைஞர் தொழிலை இவ்வளவு ஆத்மார்த்தமாக செய்த மனிதரா என கோபாலரத்னம் அவர்களைப் பற்றி ‘தமிழ்நாட்டு நீதிமான்களி’ல் படித்தபோது நெஞ்சுருகியது. - செ.தமிழ்மணி, காரமடை.
சல்லீசான விலையில் ஐபோனா? ஆப்பிள் இந்தியா வரட்டும்னு ப்ரே பண்ணுறோம்! - வி.வி.குழந்தைவேலன், தர்மபுரி.
யூட்யூப் புக் ரிவ்யூ, சோஷியல்பீடியா இரண்டுமே நூல் வாசிப்பிற்கான வெர்ஷன் 2.0 பணிகள். - டி.ராஜாசுரேஷ், திருவண்ணாமலை.
பசித்து புசிப்பதோடு பருவகால உணவையும் பக்குவமாகப் பேசிய ‘உயிரமுது’ ஆரோக்கியத்தின் அரிச்சுவடி. - கு.சூர்யாஜீவன், சேலம்.
|