தூள் தலைவரே!



‘நியூஸ் சாண்ட்விச்’ பகுதியில் இடம்பெற்ற ‘காவலன் செயலியின் பயன்பாடு’, ‘தேநீர் கோப்பையையும் சாப்பிடலாம்’ ஆகிய தகவல்கள் பயனுள்ளவை.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கீதா, கோவில்பட்டி; மனோகரன், கோவை; கருணாகரன், போரூர்.

தருமி - சொக்கர் உரையாடல் கொண்ட ‘தொல்(லைக்) காப்பியம்’ தூள் தலைவரே... தோட்டா ஜெகனுக்கு 1000 பொற்காசுகளைப் பரிசளிக்கலாம்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தேவையில்லாத, அவசியமில்லாத, அர்த்தமற்ற செயல்.
- ப.மூர்த்தி, பெங்களூரு;  ராஜம் தம்பையா, மாம்பலம்; சந்திரமதி, சென்னை; பிரேமா குரு, சென்னை; எம்.எஸ்.இப்ராகிம், சென்னை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

கைலாசா நாட்டின் அதிபர், நிலா நகரமான ‘மூன்டோப்பியோ’வில் டேரா போடுவாரா?!
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முரளி, நங்கநல்லூர்.

இந்திய குடியுரிமை சட்டத்தின் மூலம் மத ரீதியாக முஸ்லீம்களையும், இன ரீதியாக தமிழர்களையும் விலக்கி வைக்கும் பேராபத்தை உருவாக்கும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும் ‘அதிமுக’தான் இந்தியா பற்றி எரியக் காரணம் என்ற குற்றச்சாட்டில் தவறில்லை.
- மனோகர், மேட்டுப்பாளையம்; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்
புதூர்; ஆசிகா, வியாசர்பாடி.

தமிழ்நாட்டில் இத்தனை பெண் எழுத்தாளர்களா? ஆச்சர்ய ஆனந்தம். இலட்சிய நோக்கில் செயல்பட்டு வரும் ‘அருணோதயம்’ பதிப்பக உரிமையாளர் வெங்கடாசலம் பாராட்டுக்குரியவர். பேனாவை மிஞ்சிவிட்டது பிளாக்கர்.
- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; இராம.கண்ணன், திருநெல்வேலி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மியாவ்சின், கே.கே.நகர்.

‘கிருஷ்ணலீலை’ பட இயக்குநர் வறுமையில் வாடுவது கண்டு மனம் வருந்தியது. அந்த குசேலனின் வறுமையைப் போக்கிய கிருஷ்ணர் போல் யாராவது அவருக்கு உதவ வேண்டும். அவரின் முகநூல் பக்கத்தையும், அவரது தற்போதைய நிலையையும் கூறி மனதை பாரமாக்கிவிட்டீர்கள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; கவுரிநாத், பரங்கிமலை; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்.

சுகாசினியின் இயற்கை நறுமணத்துடன் கூடிய வாசனைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த தகவல்கள் நறுமணமாக இருந்தது.
- ரா.புனிதவதி, பொள்ளாச்சி; நடராஜன், திருமுல்லைவாயல்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; இலக்சித், மடிப்பாக்கம்.

ரீடர்ஸ் வாய்ஸ்