அடுத்த உசேன் போல்ட்!உலகம் அறிந்த ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசேன் போல்ட். 2009ம் ஆண்டு 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

இதுவரை உசேனின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால், ரூடால்ப் இங்க்ராம், அந்த சாதனையை முறியடித்துவிடுவார் என்று இணைய உலகில் பரபரப்பாக விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.பலர் ரூடால்பை ‘அடுத்த உசேன் போல்ட்’ என்று புகழ ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ரூடால்பின் வயது 7தான். அமெரிக்காவைச் சேர்ந்த ரூடால்ப், 100 மீட்டர் தூரத்தை 13.48 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவில் இவரின் வயதில் யாரும் இவ்வளவு சீக்கிரத்தில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்ததில்லை. நான்கு வயதிலிருந்து ஓட்டப்பந்தயத்துக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரூடால்பை இன்ஸ்டாவில் 3 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். கால்பந்திலும் கில்லாடியாம் இந்தச் சுட்டி.

த.சக்திவேல்