நகரம்கி.பி.2051.பாண்டி எழுந்தான். சோலையம்மா அவனை உலுக்கி உலுக்கி எழுப்பினாள்.‘‘என்னடி நிம்மதியா தூங்க விட மாட்டியா?’’‘‘‘யோவ் ஊரே உலுக்கிக் கிடக்குது. எழுந்திருயா.
மொத்த ஊரும் வெளியில இருக்கு. குழந்தைக்கு பால் வாங்கிட்டு வா. சீக்கிரம் போ கடைக்கு. என்னால வவுத்துல இருக்கிற குழந்தையை வச்சுட்டு ஒண்ணும் பண்ண முடியலை...”‘‘டிவியை போடு என்னன்னு பார்ப்போம்...’’‘‘‘அதெல்லாம் போச்சு. ஒண்ணும் வேலை செய்யலை...”பாண்டி தடாலென்று எழுந்தான். “என்னாடி சொல்றே... டிவி இல்லையா?’’

‘‘‘ஆமாம்...’’
அவள் சொன்னதை நம்பாமல் டிவியைப் போட்டான். எதுவும் வரவில்லை. வெளியில் ஓடினான். மக்கள் எல்லோரும் ரோடில் நின்று கொண்டிருந்தார்கள்.முத்து அவனைப் பார்த்தான். ‘‘டேய் மட்டை... இப்பத்தான் எழுந்தியா?”

‘‘‘என்னடா நடக்குது நாட்டுல?’’‘‘எல்லாம் முடிஞ்சு போச்சு...’’‘‘‘பாப்பாக்கு பால் வாங்கணும்டா...’’‘‘ஓடுறா கடைக்கு... கடையை மூடிடப் போறான்...”
பின்னால் மளிகைக் கடைக்கு ஓடினான். ஷட்டரை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘‘‘அண்ணாச்சி ஒரு பால் பாக்கெட்...’’
‘‘எல்லாம் காலி... கடையே காலி. அவ்ளோதான்...”
பாண்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னதான் நடக்குது? திரும்ப ஓடினான் வீட்டிற்கு.
சோலையம்மா ‘‘எங்கய்யா பாலு?” என்று தவித்தாள்.
குழந்தை விடாமல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது.

‘‘இல்லே, எல்லாம் முடிஞ்சு போச்சு...”
பக்கத்து வீட்டு அபிராமி வெளியில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தாள். அவளிடம் ஓடினாள் சோலையம்மா.
‘‘அக்கா... குழந்தை அழுவுது. கொஞ்சம் பால் கிடைக்குமா?”
‘‘எல்லாம் காலையில டீ போட்டு குடிச்சுட்டோம்... கால் டம்ளர்தான் இருக்கு...”
‘‘அதையாவது கொடு அக்கா...”

‘‘வா...’’ அபிராமி அவளை அழைத்துக் கொண்டு தன் வீட்டிலிருந்து சின்ன டம்பளரில் பாலை எடுத்துக் கொடுத்தாள்.
பாண்டி முத்துவோடு வெளியில் வந்தான்.ரோடு முழுக்க மக்கள். எல்லா கடைகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
‘‘என்னடா ஆச்சு... எதாவது பெரிய தலை மண்டையைப் போட்டுடுச்சா?”
‘‘கஜானா காலி. இங்கயும் இல்லே... தில்லியிலும் இல்ல... காலையில இருந்து ஒரு தண்ணி லாரிகூட நம்ம ஏரியாவுக்கு வரலை. பத்து நாள் முன்னாடி வந்தது. கணக்குப்படி இன்னைக்கு வரணும்...’’

‘‘என்னாடா சொல்றே... ஒரே கன்பிஷினா கீது...”
‘‘எல்லா அரசியல் தலைகளும் நேத்து ராத்திரியே நாட்டை விட்டு ஓடிட்டாங்க. ஒரு பயலும் இல்லே. இனிமே என்ன பண்ணணும்னு முடிவு பண்ணணும்...”சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்தான். வாயில் வைத்து பற்ற வைக்கும்போது தடாலென அவன் மீது மோதிய ஒருவன் அவன் வாயிலிருந்து பீடியை உருவிக் கொண்டு ஓடினான்.

‘‘அட நாதாரி... பீடியை பிடுங்கின்னு ஓடறான்... என்னடா ஆச்சு இவங்களுக்கு? முத்து ஒரு பீடி கொடு...’’
‘‘இல்லே...’’‘‘எப்பவுமே ஒரு கட்டு வச்சிருப்பியே...’’
‘‘ஒரு கட்டு ஊட்டுல ஒளிச்சு வச்சுருக்கேன்...”
‘‘அடப்பாவி...”

ஏரியா பையன் ஒருவன் ஓடி வந்தான். ‘‘அண்ணே கரண்டும் கட்டாயிடுச்சு...’’
‘‘ஐயோ... எப்படிடா ஒரு நாள்ல எல்லாம்...’’
தனித்தனி தீவுகள் ஆயினசென்னையில் ஆரம்பித்து காஷ்மீர் வரை. எல்லைக்கு ஒரு ஊர்க்காரன். வீட்டில் அரிசி இருப்பு குறைந்தது. தண்ணீரே இல்லை.
முத்து ஒரு தகவல் சொன்னான். ‘‘மச்சி... பீச்சு கண்ட்ரோல் முழுக்க சக்திமாறன் கையில போயிடுச்சு. முன்னாடி படம் எல்லாம் எடுத்துகினு இருந்தாரே... அவர் கையில... பீச்சோரம் நாலு சேட்டுங்க எல்லாப் பொருளையும் பதுக்கிக்கறானுங்க.

அவனுங்களுக்கு வெளிநாட்டுல இருந்த எல்லாம் வருது. போட்டை வச்சு நடுக்கடல்ல இருந்து கொண்டு வந்து அவங்க இடத்துல இறக்கிக்கறாங்க. அங்கிருந்து மாறன் கைக்கு வருது. எது வேணும்னாலும் நாம இனிமே அவன்கிட்டதான் போவணும்...”
‘‘என்னடா திகில் உடறே...”

‘‘ஆமாண்டா. ஒரு கிலோ அரிசி வேணும்னா ஒரு சவரன் நகை தரணும். தண்ணி ஒரு லிட்டரு இரண்டாயிரம்...”
‘‘கஞ்சா அடிச்சிட்டு உளர்றியா?’’
‘‘கஞ்சா ஒரு பொட்டலம் இரண்டாயிரம் ரூபா...”
பாண்டிக்கு தலை சுற்றியது.

‘‘நம்பிக்கை இல்லேன்னா நம்ம ஊர் சுந்தரி அக்காவை கேட்டுப் பாரு. அவங்க மூலம்தான் தகவல் வந்துச்சு...”
சுந்தரியிடம் ஓடினான். ‘‘அக்கா... அக்கா... இந்த முத்து பய என்னென்னமோ சொல்றானே..?’’
‘‘எல்லாம் நிசம்...’’‘’அவ்வளவு காசுக்கு என்னக்கா பண்றது?”‘‘சாவு... என்னாண்ட வந்து கேட்டா என்னா சொல்றது? எதுவுமே இல்லேன்னா குழந்தைங்களை கேட்கறாங்க... ஒரு குழந்தை கொடுத்தா ஒரு மூட்டை அரிசி...”‘‘என்னக்கா இப்படி சொல்றே? குழந்தையை வச்சு என்னா பண்ணுவாங்க?”

‘‘எவனுக்கு தெரியும்... அதான் சீனாவுல எல்லாத்தையும் பொரிச்சுத் துண்றாங்களாமே... அங்க சேட்டுங்க அனுப்புறாங்களோ என்னமோ..?’’
வீட்டுக்குத் திரும்பினான். வியர்க்க வியர்க்க உட்கார்ந்திருந்தாள் சோலையம்மா.‘‘எங்கய்யா போய்த் தொலைஞ்சே? பொட்டு அரிசி இல்லே ஊட்ல. ரெண்டு நமுத்துப் போன பிஸ்கெட்டு இருந்துச்சு. என்னாவது பண்ணுயா... முத குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும் போதே ரெண்டாவது லோட் பண்ணிட்ட... என்னாத்த பண்ணப் போறே?”

படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான்.‘‘நான் பாட்டுக்கு பேசிக்கினே இருக்கேன்... நீ என்னமோ குழந்தையையே பாத்துக்கிட்டிருக்கிறே?”‘‘ஒண்ணும் இல்ல...’’ என்றான் பாண்டி.இருட்டு. பொட்டு வெளிச்சம் இல்லாத இருட்டு.ப்ளாக் வாசலில் உட்கார்ந்திருந்தாள் சோலையம்மா மற்ற வீட்டுப் பெண்களுடன்.முத்துவும், பாண்டியும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. சோலையம்மா அபிராமியைக் கேட்டாள்.

‘‘ஏங்க்கா... என் புருஷனைப் பார்த்தே?”
‘‘இல்ல... என் புருஷனையும் காணோம்...”
அவள் குரல் மட்டும் கேட்டது.
‘‘என்னடா இது சரிப்பட்டு வருமா?’’
‘‘வேறென்ன செய்ய? உயிர் பொழைக்கணும் இல்லே...”

‘‘அதுக்காக எவன் வீட்டுப் புள்ளையையோ தூக்கணும்ன்னு சொல்றே... நாளைக்கு  நாமதான் தூக்கினோம்னு தெரிஞ்சா ஊரே பொளந்துடும்...’’
‘‘பயந்தா வேலைக்கு ஆவாது... ஒரே ஒரு பையனைத் தூக்கறோம்... மாத்தறோம்... ஆளுக்கு பாதியா அரிசியை பிரிச்சுக்கறோம்...”
‘‘எப்படிடா சமைப்பாங்க?”‘‘கேஸ் இருக்கற வரை கேஸ்ல... அப்புறம் சுள்ளியடுப்புதான்...”

சைக்கிளைத் தள்ளிக் கொண்டிருந்த பாண்டியின் தோளைத்தொட்டான் முத்து. ‘‘அங்க பாரு... ஒரு பையன் இருட்டுல ஓரமா ஒண்ணுக்கு உட்டுக்குனு இருக்கான்...”சுற்றும் முற்றும் பார்த்து பரபரவென்று இயங்கினார்கள்.

வாயில் துணியடைத்து சைக்கிளில் பின்னால் பையனை உட்கார வைத்துக்கொண்டு முத்து உட்கார பாண்டி தெறி வேகத்தில் சைக்கிளை ஓட்டினான்.
காந்தி பீச் அருகே நீண்ட உருட்டுக் கம்பி போட்டு கட்டியிருந்தார்கள். ஐந்தடிக்கு ஒருத்தன் துப்பாக்கியுடன் நின்றிருந்தான்.
ஒருவனை நெருங்கினார்கள்.

‘‘என்னா வேணும்?”
‘‘அரிசி அண்ணே...”
‘‘என்ன கொண்டாந்திருக்க?’’
‘‘புள்ளைணே...’’

‘‘பாதி மூட்டை அரிசியும் அஞ்சு லிட்டர் தண்ணியும் கிடைக்கும்... உசுரோட இருக்கான் இல்லே?”
‘‘இருக்கான்ணே...’’ பையனைத் தூக்கிக் கொடுக்க அவன் வாங்கிக் கொண்டு ‘இரு வர்றேன்’ என்று இருளில் மறைந்தான். திரும்பி வர அரைமணி நேரம் ஆனது. பாதி மூட்டை அரிசியையும் அஞ்சு லிட்டர் தண்ணீர் கேனையும் தூக்கிக் கொடுத்தான்.
‘‘பாண்டி உன் வூட்டுல இறக்கி வச்சு பிரிச்சுக்கலாம்...”

‘‘சரி... ரெண்டு நாள் வெளியிலேயே போக வேண்டாம்...’’
இருவரும் இருட்டில் வீடு போய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு. வீட்டையடைந்த பாண்டி கதவை லேசாய் தட்டினான். சோலையம்மாள் திறந்தாள்.
‘‘எங்கய்யா போனே?”அவள் வாயைப் பொத்தினான். உள்ளே நுழைந்த பாண்டியின் பின்னால் வந்தவனை இருட்டிலும் அடையாளம் தெரிந்து கொண்டாள்.

‘‘இந்த தண்ணியை பாதி எடுத்துட்டு பாதியை அவன் கையில கொடு. அரிசியை கொடுக்க பை வேணும்...’’
பை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். பாதி அரிசியை அதில் கொட்டினான். அவனிடம் கொடுக்க, அவன் எடுத்துக் கொண்டு இருளில் கலந்து வெளியேறினான்.

கதவினை மூடியதும் சோலையம்மாள் மெல்லிய குரலில் கேட்டாள். ‘‘யார் ஊட்டு புள்ளையையா தூக்குனீங்க?”
‘‘மூதி வாயை மூடிட்டு கமுக்கமா இரு. இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான் வரும். அதுக்கப்புறம் எலிக்கறி, நாய்க்கறிதான்...’’
‘‘நாளைக்கு நம்ம குழந்தையை யாராவது தூக்கினா?”‘‘சின்னக் குழந்தையை யாரும் தூக்க மாட்டாங்கடி...”‘‘தூக்குனா...”‘‘மூடு... இன்னும் கொஞ்ச நாள்ல ஊரே கலவர பூமியா ஆகப்போவுது பாரு...”பாண்டி சொன்னது மாதிரியே ஆனது. ஒரு மாதம்தான். நாறிவிட்டது சென்னை. பல வீட்டு
களின் பிள்ளைகள் காணாமல் போயினர்.

கன்னியப்பன்தான் அந்தச் செய்தியையும் சொன்னான். ‘‘அண்ணே... மல்யுத்தப் போட்டி நடத்தறாங்களாம் பீச்சுல... அவங்க ஆளை அடிச்சு கெலிச்சுட்டா ஒரு மூட்டை அரிசியாம்... இதுவரைக்கும் ஒருத்தன் கூட ஜெயிக்கலை... தோத்தவனை சுட்டு நடுக்கடல்ல போட்டுடறாங்களாம்...’’
தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் எந்த திசையிலிருந்தாவது காதில் வந்து விழுந்தது.

மக்கள் எல்லாம் பைத்தியம் போல் சுற்றிக் கொண்டிருந்தார்கள். மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. டிவி இல்லை. எதுவுமே தெரியாமல் மக்கள் பித்துப் பிடித்து உளறிக் கொண்டிருந்தார்கள்.முத்து ஓடிவந்தான். ‘‘பாண்டி... பாண்டி...’’‘‘என்னடா?”‘‘இப்படிக்கா வா... ஒரு விஷயம்...”ஓரமாய் போனான். ‘‘என்னா சொல்லு...’’‘‘பீச்சுல லைவ் ஷோவாம்... வித்தியாசமாய் இருக்குமாம்... ஒரு கைப்பிடி அரிசி இருந்தா உள்ளே பார்க்க விடுவாங்களாம்...”‘‘அப்படி என்ன ஷோ?’’
‘‘தெரியலை... நாம ரெண்டு பேரும் போறோம்...”
‘‘எத்தினி மணிக்கு?”

‘‘ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு...’’
இரண்டு பேரும் போய்ச் சேர்ந்தபோது மிஷின் கன்னுடன் நின்றிருந்தவன் இரண்டு பேரிடமும் இருந்த கைப்பிடி அரிசியை வாங்கிக் கொண்டு உள்ளே
விட்டான்.உள்ளே தள்ளி கடல் பக்கம் பார்த்து மேடை போடப்பட்டிருந்தது. அவர்களுக்கு முன்னால் பலர் வந்து மேடையின் முன்னால் காத்துக் கிடந்தனர். மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் நாலு புறமும் தொங்கிக்கொண்டிருந்தன.

சக்தி மாறன் மேடையில் வந்தார். ‘‘மூணு மாசமா எதுவுமே பார்க்காம காய்ஞ்சு கிடந்திருப்பீங்க... பசி, தூக்கம் எல்லாம் இல்லாம ஓடியிருக்கும்... இன்னைக்கு உங்களுக்கு இந்த லைவ் ஷோ... இதுவரைக்கும் உலகத்துலயே பார்க்காத அதிசயத்தைப் பார்க்கப் போறீங்க...”அவர் இறங்க சன்னத் துணியில் அந்தப் பெண் மேடையேறினாள்.

மெல்ல வலம் வந்தாள்.அவளின் வாளிப்பான உடலை எல்லோரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடை போட்டவள் சன்னத் துணியையும் வீசினாள். பின்னால் வந்த இன்னொரு பெண்ணும், தான் அணிந்திருந்த சன்னத் துணியை வீசி எறிந்தாள்.பாண்டியும் முத்துவும் அதிர்ந்தார்கள்.முதலில் சன்னத் துணியை வீசியவள் சோலையம்மா. அடுத்து வீசியவள் அபிராமி.

மொறு மொறு

தமிழில் ஹாரர் முகம் காட்டும் ராய்லட்சுமி, பாலிவுட்டில் பிகினி வெடி வெடிக்கும் flower pot. ஜிம், ஃபிட்னஸ் பக்கம் சங்கு சக்கரமாக சுழலுபவர் ரசனையாக சாப்பிடுவதில் கம்பி மத்தாப்பு. மொறு மொறு அப்பளத்துடன் ரசம் சாதம், பிரியாணி, சௌராஷ்டிரியன் கீமா, பிசி பேலாபாத், ஜப்பானீஸ் சிக்கன் வித் ரைஸ் என விதவிதமாக ருசிக்கிறார் ராய். ‘‘யாராவது ருசியா ஹெல்த்தியா சாப்பாடு கொடுத்தால், ஒர்க் அவுட்டை விட்டுட்டு சாப்பிட ஆரம்பிச்சிடுவேன்!’’ என்கிறார் பளீச் புன்னகையுடன்.

டிரிப்புக்கு டிரிப் ஃபுட்!

மும்பையில் பரபரத்தாலும், சென்னையை நினைத்தால் பூஜா ஹெக்டேவின் முகம் கலர்ஃபுல் பொக்கேவாகிவிடும். ‘முகமூடி’ ஹீரோயின்.
எப்போது சென்னை வந்தாலும் இங்கே ‘சவுத் இந்தியன் தளி’ ஆர்டர் செய்து ஆனந்தமாகி விடுகிறார்.‘‘பயணங்களின்போது உணவு ரொம்ப அவசியம். என்னோட ஒவ்வொரு ட்ரிப்பிலும் அமேஸிங் ஃபுட் மெமரீஸ் உண்டு. நியூயார்க் போனால் பெரிய சைஸ் பீட்சா ட்ரை பண்ணுவேன். வாஷிங்டன்ல முதல் தடவையா கொரியன் ஃபுட் சாப்பிட்டது மறக்க முடியாத மொமன்ட்ஸ்!’’ பூரிக்கிறார் பூஜா.

கடல் காதலி!

வீட்டில் பெட்ஸ் வளர்ப்பதால் ‘அனேகன்’ அமைரா தஸ்தூர் மட்டன், சிக்கன் சாப்பிடுவதில்லை. ஆனால், கடல் உணவுகளின் காதலி. ஃபிஷ் கறி பிடிக்கும். லன்ச் மெனுவில் கிரில்டு ஃபிஷ் கண்டிப்பாக இடம்பெறும். பாலிவுட்டில் பலரும் அமைராவை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி, ‘அவ்ளோ ஐஸ்க்ரீம் சாப்பிட்டும் எப்பவும் ஸ்லிம்மா இருக்கீங்களே?’ என்பதுதானாம். அமைராவின் ஒல்லிக்குச்சி ரகசியம் egg வொயிட்டில் இருக்கிறது. ரைஸ், ரொட்டியை விட ஆம்லேட், முட்டை வொயிட்ஸை விரும்புவதுதான் பொண்ணோட ஸ்லிம் சீக்ரெட்!

கையேந்தி பவன்

பாலிவுட்டில் பிசியான பிறகும், புது கார் வாங்கிய பிறகும் சிம்பிள் அண்ட் ஹம்பிளை கடைப்பிடிக்கிறார் டாப்ஸி. ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவது என்றால் டாப்ஸிக்கு அத்தனை இஷ்டம். ராதிகா ஆப்தேவைப்போல சட்டென ரோட்டுக்கடைகளில் சாப்பிட்டு மகிழ்கிறார். அதுவும் ஸ்பைஸி ஃபுட் பிரியை. காரசாரமான வட இந்திய டிஷ்கள் என்றால் இன்னும் இஷ்டம். சிக்கனும் பிடிக்கும். ஆனால், மீன் பிடிக்காது. ஸோ, டாப்ஸிக்கு நாட்டுக்கோழியா பொரிச்சு வைங்க பாஸ்!

 சுப்ரஜா