கவசம்!
ரீடர்ஸ் வாய்ஸ்
 ‘MeToo’வுக்கு ஒரு வயதாகிவிட்டதா! சில விவாதங்கள், முரண்கள் இருந்தாலும் பெண்களுக்கு இது ஒரு கவசம்தான். - மனோகர், மேட்டுப்பாளையம்; நிலவழகு, நீலாங்கரை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; எஸ்.சுந்தர், திருநெல்வேலி; கவுரிநாத், பரங்கிமலை; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; இராம.கண்ணன், திருநெல்வேலி.
‘கண்ணை நம்பாதே’ படத்தின் வெற்றிக்கு வெடிக்கப் போகிற பட்டாசு சப்தம் இப்போதே எங்கள் செவியில் ஒலிக்கிறது! - செம்மொழி, சேலையூர்; ஆர்.ஜெ.சி, சென்னை; கருணாகரன், போரூர்; பிரேமா பாபு, சென்னை; சைமன் தேவா, விநாயகபுரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ப.மூர்த்தி, பெங்களூரு.
கானா பாடும் புள்ளைங்கோ தோக்கறதுக்கு சான்ஸே இல்லைங்கோ. - இலக்சித், மடிப்பாக்கம்; சந்திரமதி, சென்னை; பப்பு, அசோக் நகர்; மீ.அழகுமங்கை, அடையாறு.
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் புத்தகங்கள் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் பொன்.மாரியப்பனின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. - பிரேமா ராஜ்குமார், குன்னூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; வளர்மதி, கன்னியாகுமரி; லால் சந்திரன், திருச்சி; பிரேமா குரு, சென்னை.
நாஞ்சில் சம்பத்தின் பேட்டி அருமை. அனைத்து செய்திகளும் எங்களுக்குப் புதுசு. - வேல்முருகன், திருநெல்வேலி; அ.பா.ராசன், மதுரை; என்.சண்முகம், திருவண்ணாமலை; நடராஜன், திருமுல்லைவாயில்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; செல்வராஜ், விழுப்புரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; கருணாகரன், போரூர்.
சினிமாத்துறையினரால் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயம் இந்த ‘வெப் சீரிஸ்’ என்பதை ஆணித்தரமாக உணர்த்தி உள்ளீர்கள். - மகேந்திரன், திருப்பூர்; கீதா, கோவில்பட்டி; என்.சண்முகம், திருவண்ணாமலை; சிவக்குமார், திருச்சி; க.நஞ்சையன், பொள்ளாச்சி; கதிர், கோவை; ஆசிகா, வியாசர்பாடி.
‘வீக் எண்ட்’ பார்ட்டிகளுக்குப் போக வேண்டிய இளைஞர்கள் விவசாயம் நோக்கித் திரும்பினால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்பதை விஜய் குமார் மணியும், வசந்தகுமார் மணியும் நிரூபிக்கிறார்கள். - இலக்சித், மடிப்பாக்கம்; புனிதவதி, பொள்ளாச்சி; ரவிக்குமார், கோவை; முகம்மது உஸ்மான், மூலக்கடை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; பிரேமா பாபு, சென்னை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்று ஷூட்டிங் பார்த்து, பழகிய ஸ்டூடியோக்கள் இன்று குடியிருப்புகளாகவும், ஷாப்பிங் மால்களாகவும் மாறிப்போனதை நினைத்து மனம் வருந்துகிறது. - செல்வராஜ், விழுப்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.எஸ்.சேகர், அத்திப்பட்டு; ரா.ராஜதுரை, சீர்காழி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.
|