COFFEE TABLEவேகம் வேண்டாம்

‘‘இந்தியாவில் கடந்த வருடம் மட்டுமே சாலை விபத்துகளால் 54 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் குடித்துவிட்டு வண்டி ஓட்டியவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே விபத்துக்குள்ளாகியுள்ளனர். வேகமாக வண்டி ஓட்டியதுதான் அதிக விபத்துக்குக் காரணம்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு.

இந்நிலையில் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் 10 ஆயிரமும், வேகத்துக்கு 5 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.
‘‘குடியைக் கவனிக்கும் போக்குவரத்துத் துறை வேகத்தையும் கண்காணிக்குமா..?’’ என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.

‘‘எந்த நேரமும் வாகன ஓட்டிகளைக் கண்காணிக்க முடியுமா..?’’ என்பது போக்குவரத்து காவல்துறையினர் எழுப்பும் வினா. திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என சும்மாவா சொன்னார்கள்.

தீபிகா 918

டஸ்கி குயின் தீபிகா படுகோனே, இன்ஸ்டாவில் 39 லட்சம் ஃபாலோயர்களைக் குவித்துவிட்டார். இத்தனைக்கும் மொத்தமே 918 பதிவுகள் மட்டும்தான் தெறிக்க விட்டிருக்கிறார். ஃபிட்னஸ் ஒர்க்அவுட்களை காட்டி பயமுறுத்தும் நடிகைகளுக்கு மத்தியில் சாஃப்ட் லுக் போட்டோ ஷூட்களையே தட்டிவிட்டு மகிழ்கிறார் தீபி. அதிலும் ஒவ்வொரு போஸுக்கும் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளுது பொண்ணு. கூடவே ஹார்ட்டின் சிம்பள்களும் களைகட்டுகின்றன.

இரண்டு நாட்களுக்கு பேட்டரி நிற்கும் போன்

ஸ்மார்ட்போன் பயனாளிகளின் முக்கிய குறையே பேட்டரிதான். இந்நிலையில் 6000mAh திறன்கொண்ட பேட்டரியுடன் களமிறங்கியிருக்கிறது ‘சாம்சங்’ நிறுனத்தின் புது மாடலான ‘கேலக்ஸி M30s’. இவ்வளவு பேட்டரி திறனுடன் ஒரு ஸ்மார்ட்போன் வெளியாவது இதுவே முதல் முறை.
6.40 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 48 எம்பியில் ஜொலிக்கும் முக்கிய கேமரா, 5 எம்பியில் டெப்த் கேமரா, 8 எம்பியில் அல்ட்ரா வைடு கேமரா என அசத்துகின்றன பின்புற கேமராக்கள். இதுபோக 24 எம்பியில் செல்ஃபி கேமரா, 4k வீடியோ ரெக்கார்டிங், ஸ்லிம்மான வடிவமைப்பு என கெத்து காட்டுகிறது இந்த போன். விலை ரூ.13,999 - ரூ. 16,999.

டாப் ரேங்க் பேனர்

தனியார் பள்ளி அல்லது கல்லூரியின் முன் விளம்பரத்துக்காக ஒரு பேனரை வைத்திருப்பார்கள். அந்த பேனரை மாநில அளவில்
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2-வில் டாப் ரேங்க் எடுத்த மாணவர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கும்.

ஆனால், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி படிக்கும் மாணவர்களின் டாப் ரேங்க் பட்டியலை வெளியிட்டு பேனர் வைத்திருக்கின்றனர்!இது குழந்தைகளின் மனதில் போட்டி மனப்பான்மையை விதைக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்ட, இன்னொரு பக்கம் வைரலாகிவிட்டது அந்த பேனர்.

மம்மி லியோன்

பொறுப்பான அம்மாவாகவும் புன்னகைக்கிறார் சன்னி லியோன். குழந்தைகளின் ப்ளே ஸ்கூலுக்கு சென்று அழகான டிராயிங்கை வரைந்து
பிரமிக்க வைக்கிறார்.‘‘இன்னிக்கும் புது பெயின்ட்டிங் பண்ணினேன். அந்த ஓவியத்திற்கு ஒரு அருமையான பேக்ட்ராப்பை என் பசங்க கலரிங் பண்ணுவாங்கனு நம்புறேன். I hope this never changes...’’ என்கிறார் கூலாக. அந்த ரம்மியமான மொமண்ட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்குகளைக் குவிக்கிறது பொண்ணு.

குங்குமம் டீம்