உலகின் மிகப்பெரிய விமானம்!



‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் பால் ஆலன். விமானங்களின் மீது பெருங்காதல் கொண்ட அவர்,  ‘ஸ்ட்ரேட்டோலான்ச்’ என்ற நிறுவனத்தை 2011ல் ஆரம்பித்தார். இதுவரை யாருமே உருவாக்கிடாத விமானத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது பால்  ஆலனின் கனவு. ஆனால், கடந்த வருடம் இறந்துவிட்டார். இருந்தாலும் ஆலனின் கனவை அவரது நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. ஆம்; உலகின்  மிகப்பெரிய விமானத்தைத் தயாரித்ததோடு அதை பறக்கவிட்டு சாதனையும் படைத்துள்ளது ‘ஸ்ட்ரேட்டோலான்ச்’.
இறக்கைகளின் நீளம் மட்டுமே 117  மீட்டர், அதாவது கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட அதிகம். வாலின் நீளம் 15 மீட்டர், விமானத்தின் உடற்பகுதியின் நீளம் 73 மீட்டர், சுமார் 650  டன் எடை, ஆறு எஞ்ஜின்கள், மணிக்கு 274 கி.மீ வேகம் என அசத்துகிறது இந்த விமானம். இருபதாயிரம் அடி உயரத்தில்  பறந்துகொண்டிருக்கும்போதே ராக்கெட்டை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2022ல் இந்த விமானம் பயன்பாட்டுக்கு வருகிறது.

* த.சக்திவேல்