73,000 திருநங்கைகள் கைது!



ஆமாம். கடந்த 4 வருடங்களில் ரயில் பயணிகளிடம் பணம் பறித்த விவகாரங்களில் 73 ஆயிரம் திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பலரும் திருநங்கைகளால் பிரச்னை ஏற்படுவதாகவும், அவர்கள் பணத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துவிடுவதாகவும் புகார் கொடுத்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாம் இது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வழியே கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த விவரத்தை பதிலாக ரயில்வே அமைச்சகம் கொடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 ஆயிரம் திருநங்கைகள் இதே புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்!
சமூகத்தால் திருநங்கைகள் புறக்கணிக்கப்படுவதாலேயே இப்படி அவர்கள் நடந்துகொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா