திகைப்பும் வியப்பும்!



மக்கள் தொகைக்கேற்றவாறு டாக்டர்கள், நர்ஸ்களை அமர்த்தாமல் அரசே மறைமுகமாக மக்களைக் கொலை செய்கிறது என்கிற அதிர்ச்சிகரமான உண்மையை வெளிப்படுத்திய கட்டுரை திகைக்க வைத்தது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; அ.யாழினி பர்வதம், சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; நாராயணன், சென்னை; பப்பு, சென்னை; கருணாகரன், மதுரை; அன்பழகன், சென்னை; பிரேமா குரு, சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு;
ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

ப்ளாக்ஹோல் என்னும் அறிவியல் ஆச்சர்யத்தைப் பற்றிய கட்டுரை வியக்க வைத்தது.
- மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரேமா குரு, சென்னை; ஜெயசந்திரபாபு, சென்னை; அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை; பாபு, மடிப்பாக்கம்; கோபி, சென்னை.

அடேங்கப்பா... மாணவர்கள் வரைந்த ஓவியங்களா இவை! ஒரு நொடி நம்மை அசைத்துப் பார்த்துவிட்டது ஒவ்வொரு ஓவியமும்.
- பிரேமா குரு, சென்னை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; இலக்சித், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

அமேஸிங் அஜித்தின் அட்டைப்படம் அழகு என்றால் சிலிர்க்கும் ஷ்ரத்தா நாத்தின் பேட்டி சிறப்பு.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; புகழ்மதி, ஆதம்பாக்கம்; மனோகர், திருநெல்வேலி; செல்வராஜ், சென்னை; கவுரிநாத், பரங்கிமலை; சரண் சுதாகர், வேளச்சேரி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை.

காரணமே தெரியாமல் இந்தியச் சிறைகளில் 3.78 லட்சம் கைதிகள் தவித்துக்கொண்டிருப்பது, எவ்வித குற்றமும் செய்யாத 1,942 குழந்தைகள் சிறையில் வாடுவது போன்ற தகவல்களை வெளிப்படுத்திய கட்டுரை மனதைப் பிசைந்தது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்;  மியாவ்சின், கே.கே.நகர்; மயிலை.கோபி, அசோக் நகர்; நஞ்சையன், பொள்ளாச்சி;
சந்திரமதி, சென்னை; ஆத்மநாதன், ஆற்காடு; கலிவரதன், கீழ்க்கட்டளை; பிரேமா குரு, சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்
குறிச்சி; சாய்கவின், பொள்ளாச்சி.

‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு ஒரு மாதத்தில் முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி எம்ஜிஆர் அவர்களைச் சந்தோஷப்படுத்தியவர் மறைந்த இயக்குநர் மகேந்திரன் என்பதை அறிந்தபோது வியப்பின் உச்சிக்கே சென்றோம். இதைவிட சிறப்பான ஒரு நினைவஞ்சலியை அவருக்கு யாராலும் தர முடியாது.
- பிரேமா குரு, சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; அ.யாழினி பர்வதம், சென்னை; மகேஸ்வரி, சென்னை.   

ரீடர்ஸ் வாய்ஸ்