என்ன மாமா... சவுக்கியமா..?



அமெரிக்காவை கிண்டலடிக்கும் சீனா

ஜியோ பாலிடிக்ஸ் குறித்து அறிந்தவர்களுக்கு சீனா எப்படியெல்லாம் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது என்று தெரியும்.இதன் ஒரு பகுதியாக இப்போது அமெரிக்காவுக்கு செக் வைத்து அட்டகாசமாக சீனா சிரித்துக் கொண்டிருக்கிறது.யெஸ். கடல் ஆதிக்கத்தில் இப்போது அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முன்னேறியுள்ளது. சீனாவில் கப்பல்படை தொடங்கி 70 ஆண்டுகளாகிறது.

இதை தமுக்கடித்து உலகமே பார்த்து வியக்கும் வகையில் கொண்டாடத் தீர்மானித்தார்கள். இதன் ஒரு பகுதியாக பிரமாண்டமான கப்பல் அணிவகுப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்த போர்க் கப்பல் அணிவகுப்பில் இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த 20 போர்க் கப்பல்கள் பங்கேற்றன. இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி கப்பல்கள் ஜம்மென்று சீனாவின் குவிங்டவோ துறைமுகத்துக்குச் சென்றன.

அமெரிக்காவுக்கு பயந்தோ அல்லது பல்வேறு நாடுகள் நோ சொன்னதால் சீனாவே அழைக்கவில்லையோ... பாகிஸ்தான் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. செம குஷியில் இருப்பவர் சீன அதிபரான ஸீ ஸின்பிங்தான். பின்னே... இந்தக் கொண்டாட்டத்தில் தங்கள் நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட டெஸ்டிராயர் என்ற, ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறாரே..!

ஏற்கனவே அமெரிக்காவின் கடல் பகுதியில் ‘என்ன மாமூ...’ என அசால்ட்டாக நுழைந்து சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அமெரிக்காவின் வர்த்தகம் தாங்கிய போர்க் கப்பலை ‘உர்ர்ர்ரே’ என மோதுவது போல் போக்குக் காட்டிவிட்டுச் செல்வது சீனக் கப்பல்களின் வழக்கம்.

இந்தச் சூழலில் டெஸ்டிராயர் என்ற ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை சீனா உருவாக்கி இருக்கிறது.
அவ்வளவுதான். கொலை காண்டுடன் தன் பற்களை நற நற என அமெரிக்கா கடித்துக் கொண்டிருக்கிறது!l

காம்ஸ் பாப்பா