வாழ்த்துகள் தல!



இப்படிச் சொல்லியிருப்பவர் தோனியின் மனைவி சாக்‌ஷி! ஆனால், மகிழ்ச்சியோடு ‘தல’ என சாக்‌ஷி சொல்லியிருப்பது அஜித்தை அல்ல! தன் கணவர் தோனியை!2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆண்டுதோறும் டி-20 கிரிக்கெட் தொடரான பிரீமியர் லீக் - ஐபிஎல் - நடக்கிறது. அந்த வகையில் ஐபிஎல்லுக்கு இந்தாண்டு வயது 12.

இந்தத் தொடரில் கடந்த மாதம் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.இதற்காகத்தான் சாக்‌ஷி துள்ளிக் குதித்து தன் கணவரைப் புகழ்ந்திருக்கிறார்.ஏனெனில், தோனி தலைமையிலான சென்னை அணி பெற்ற வெற்றி அதன் 100வது வெற்றி!போதாதா? கணவரைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார் சாக்‌ஷி.நல்ல மனைவி!

காம்ஸ் பாப்பா