சுவீடன் Vs இந்தியா! ஒரு youtube யுத்தம்



இணையத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துபவரா நீங்கள்..? குறிப்பாக யூ டியூப்..?

எனில் ‘பியுவ் டை பை’ என்னும் யூ ட்யூப் சேனலுக்கும் டி சீரிஸ் யூ டியூப் சேனலுக்கும் நடக்கும் யுத்தம் தெரிந்திருக்கும்!
போர்? ஆம். யுத்தம்தான். அதாவது யார் முதலில் 10 கோடி சப்ஸ்க்ரைபர்ஸை பெறப் போகிறார்கள் என்பதுதான் இருவருக்கும் இடையிலான போட்டி!இவர்கள் இருவருமே அதிக சப்ஸ்க்ரைபர்ஸை வைத்திருக்கிறார்கள். என்றாலும் இருவரில் பியுவ் டை பை சேனலே 2 லட்சம் கூடுதலான சப்ஸ்க்ரைபர்ஸுடன் முதலிடத்தில் இருந்தது.

இந்த ரிக்கார்டை சமீபத்தில் டி சிரீஸ் முறியடித்து ஃபர்ஸ்ட் ப்ளேஸை பிடித்தது.ஆட்டமே இதன் பிறகுதான் ஆரம்பம்! தன் தோல்வியை ஒப்புக் கொள்வதுபோல் ஒரு ராப் பாடலை பியுவ் டை பை வெளியிட்டது. அவ்வளவுதான். சரசரவென மீண்டும் முதலிடத்தைப் பிடித்துவிட்டது!

ஆனால், இதன் பிறகுதான் சர்ச்சையும் வெடித்தது! யெஸ். தோல்வியை ஒப்புக் கொண்டு பியுவ் டை பை ஒரு ராப் பாடலை வெளியிட்டது அல்லவா..? அப்பாடலில் இந்தியாவை விமர்சித்திருந்தது!

பியுவ் டை பை சேனலை நடத்துவது எந்த நிறுவனமும் அல்ல. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 29 வயது இளைஞரான ஃபெலிக்ஸ் அர்விட்! யெஸ். தனிமனிதர்தான் இந்த யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். காமெடியும் சர்ச்சைகளும்தான் இந்த சேனலின் பலம். யூ டியூப் வழியே உலகளவில் அதிகம் சம்பாதிப்பவர்களில் இவரும் ஒருவர். இதன் வழியாகக் கிடைத்த பிரபலத்தை வைத்து இப்போது டிவி சேனல்களில் பங்கேற்று வருகிறார்.

ரைட்டா..? அப்படிப்பட்ட ஃபெலிக்ஸ் அர்விட், தனது தோல்வியை ஒப்புக் கொண்டு முதலிடம் பிடித்த டி சீரிஸை வாழ்த்துவது போல் வெளியிட்ட ராப் பாடலில் இந்தியாவில் உள்ள வறுமை, சாதிப் பாகுபாடு... ஆகியவற்றை எல்லாம் விமர்சித்திருந்தார். அத்துடன் டி சீரிஸ் நிறுவனத்தின் தலைவரான பூஷன் குமாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்.

போதாதா..? ஃபெலிக்ஸ் அர்விட் மீது மான நஷ்ட வழக்கை பூஷன் குமார் தொடர்ந்திருக்கிறார். அத்துடன், முதலிடத்தைப் பிடிப்பதற்காக இப்போது ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோரிடமும் உதவி கேட்டிருக்கிறார். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: பியுவ் டை பை சேனல், சுவீடன் நாட்டைச் சேர்ந்தது. டி சீரிஸ், இந்தியாவைச் சேர்ந்தது!                

காம்ஸ் பாப்பா