முன்னுதாரணம்!எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை நம்பிக் காத்துக் கொண்டிருக்காமல், கேலி, கிண்டல், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் தனிமனிதராக மரகொண்டானஹள்ளி ஏரியைச் சுத்தப்படுத்திய வேணுகோபால் கும்பள்ளி அனைவருக்கும் முன்னுதாரணமாகிவிட்டார்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; கைவல்லியம், மானகிரி; இலக்சித், மடிப்பாக்கம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; மனோகர், மேட்டுப்பாளையம்; மகேஸ்வரி, பொள்ளாச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; ஆத்மநாதன், ஆற்காடு.

‘எலெக்‌ஷன் ஜங்ஷன்’ பகுதியில் வெளிவந்தவை எல்லாம் சூப்பர். அதிலும் குழந்தைகள் தயாரித்த தேர்தல் அறிக்கை ‘சூப்பரோ’ சூப்பர்.
- நஞ்சையன், பொள்ளாச்சி; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ஆர்.ஜெ.சி, சென்னை; செம்மொழி, சேலையூர்.

‘விளையாட்டு வினையாகும்’ என்ற பழமொழிக்கேற்ப முன்பு புளூவேல். இப்போது பப்ஜி என்ற உயிர் குடிக்கும் மொபைல் விளையாட்டைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் திகைக்க வைத்துவிட்டன.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; நிலவழகு, நீலாங்கரை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பிரேமா பாபு, சென்னை; மணிகண்டன், மடிப்பாக்கம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

கடந்த ஐந்து ஆண்டு காலம் மோடியின் ஆட்சியில் நடந்த அவலங்களையும் மக்கள் அனுபவித்த துன்பம், வேதனைகளையும் புள்ளி விவரமாக விளக்கியமைக்கு நன்றி. மக்கள் புரிந்துகொண்டால் சரி.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; ப.மூர்த்தி, பெங்களூரு; கலிவரதன், கீழ்க்கட்டளை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சந்தியா திலீப், கே.கே.நகர்.

பன்முக ஆற்றல் கொண்ட ஓவியர் எஸ்.ராஜம் அவர்களின் சிறப்புகளைப் படித்தோம்; வியந்தோம்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சிவக்குமார், சீர்காழி; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; இலக்சித், மடிப்பாக்கம்; ப.மூர்த்தி, பெங்களூரு; கருணாகரன், போரூர்.

காஜல் எந்த விதத்திலும் தொய்ந்து போகவில்லை என்பது அவரது ஸ்டில்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.
- ஆர்.ஜெ.சி, சென்னை; மயிலை.கோபி, அசோக் நகர்; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; கவுரிநாத், பரங்கிமலை.

அப்பா... 94 விமான விபத்துகள் கடைசி நொடிகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற செய்தியை அறிந்து நெஞ்சுக்குலையே ஆடிப்போய்விட்டது.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ஜெர்லின், ஆலந்தூர்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

மதுரை அம்சவல்லி உணவகத்தின் சீரக சம்பா பிரியாணி சுண்டி இழுக்கிறது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி; பிரேமா பாபு, சென்னை; மனோகர், திருச்சி.

ரீடர்ஸ் வாய்ஸ்