அஞ்சு பன்ச்-லாரன்ஸ்*அசோக் நகர் வீட்டை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்காக விட்டுக் கொடுத்திருக்கிறார்.

*தன் தாய்க்காக கோயில் கட்டியிருக்கும் ஒரே நடிகர் லாரன்ஸ்தான். தாயின் மீதான பிரியத்தைக் காட்ட இதைவிட வேறு வழி தெரியவில்லை என்பார்.

*திருநங்கைகளுக்காக சென்னையில் ஒண்ணேகால் கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் விடுதி கட்டப்பட்டு அவர்கள் தங்கிப் போகவும், பாதுகாப்பாக  உணரவும் வழிவகை செய்யப்படுகிறது. இதற்கான நன்கொடைகளை அவரே சேகரித்துத் தருகிறார்.

*ஆரம்பத்தில் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக இருந்தார். ரஜினிதான் இவருக்கு டான்ஸ் மாஸ்டர் சங்கத்தில் சேர ஏற்பாடு செய்தார்.

*எளியவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்காக உதவுகிறார். முறையான சரிபார்த்தலுக்குப் பிறகு இந்த உதவி ஏழைகளுக்கு கிடைத்துவிடும்.

நன்மதி