மூட்டு வலிக்கு என்ன தீர்வு...



இன்றைய  சூழலில்  குடும்பத்திற்கு இருவரேனும் நிச்சயம் இந்த மூட்டு வலிக்கு ஆளாகியிருப்பார்கள்.  பெரும்பாலும் 40+ வயதில் ஆரம்பித்து 50களில் தீவிரம் அடையும் இந்த மூட்டுவலிக்கு என்ன தீர்வு சொல்கிறார் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நந்தகுமார் சுந்தரம் (MBBS.,F.R.C.S.,M.Sc.(Ortho-London) ,Senior  Consultant and Head of the Dept.- Orthopedics Trauma and Joint Replacement) மூட்டு வலி வருவதற்கு காரணம் என்ன? எல்லாருக்கும் மூட்டு வலி வருமா?

‘பரம்பரை பிரச்னையாகவும் இதை நாம் வரைமுறைப் படுத்தலாம். அதேசமயம் ஒரு குழந்தைக்கு இந்த ஜீன் இருக்கும், இன்னொரு குழந்தைக்கு இந்த பிரச்னை இல்லாமலும் இருக்கும், இதை காட்லெட்ஜ் என சொல்வோம்.

அதாவது இரண்டு எலும்பு சேர்கிற இடத்தில் இருக்கும் சவ்வு தேய்மானம் ஏற்படும்போது எலும்பு சுழல முடியாமல் ஒன்றோடு ஒன்று உரசி வலி ஏற்படும். மேலும் பிறவியிலேயே இந்த காட்லெட்ஜ் என்கிற சவ்வு பிரச்னை இருக்கும் நபர்களுக்கு நிச்சயம் மூட்டு வலி எதிர்காலத்தில் வரும். இந்த சவ்வு சுழல புரோட்டின் வேண்டும். அந்த புரோட்டின் சவ்வுகளில் படிவதில் குறைபாடு என்பதுதான் பரம்பரை பிரச்னை.

ஆரம்பத்திலேயே மூட்டு வலியை தவிர்க்க முடியுமா?

‘நிச்சய மாக முடியும்.  சரியான உடல் எடை, சரியான உணவுப் பழக்கங்கள், இளம் வயதிலிருந்தே முறையான உடற்பயிற்சி இதையெல்லாம் தொடர்ந்து செய்தாலே எலும்பு, தசை பிரச்னைகள் எதுவாயினும் தவிர்க்கலாம். பிரண்டை மாதிரியான உணவுப் பொருட்களையும் அடிக்கடி சேர்ப்பது அவசியம். ஒருவேளை இந்த காட்லெட்ஜ் பிரச்னை துவங்கினால் மாத்திரைகள் கொண்டும் சரி செய்யலாம்.

மூட்டு வலி தீவிரம் அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஃபிசியோதெரபி, மாத்திரைகள், நேரடியானஊசி இவைகளையெல்லாம் தாண்டியும் நிவாரணம் கிடைக்காவிடில் கீ ஹோல் சிகிச்சை கொடுப்போம் அரை நாளில் இந்த சிகிச்சை முடிந்து விடும் . பாதிக்கப்பட்ட எலும்புகளைச் சுற்றி உள்ள தேய்ந்த பாகங்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி அந்த நபருடைய ரத்தத்தில் இருந்தே பிளாஸ்மாக்களை பிரித்து மூட்டுகளுக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பது.

இந்த சிகிச்சையை வலி தீவிரம் அடைவதற்கு முன்பு எடுத்துக்கொண்டால் அடுத்து வரும் காலங்களுக்கு வலியிருந்த மூட்டில் பிரச்னைகளே இல்லாமல் தவிர்க்கலாம். ஆனால் சிலர் எந்த சிகிச்சையுமே எடுக்காமல் வலியை அப்படியே விட்டுவிட்டு கடைசி நிலையில் வருபவர்க ளுக்குத்தான் நாம் மூட்டு இணைப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்போம். மூட்டு வலிக்கு வயது வரம்புகள் உண்டு. ஆனால் கழுத்து, முதுகு, இடுப்பு எலும்பு வலிகள் இன்று எந்த வயதினருக்கும் வருகிறதே?

முறையற்ற உணவுப் பழக்கம், சீரான தூக்கமின்மை, அதீத கைப்பேசி , கணினி பயன்பாடு, அதிக தூர வாகனப் பயணம் எல்லாமுமாக சேர்ந்து எலும்பு தேய்மானம், பின் வலி என கொண்டு வந்துவிடுகின்றன. யோகா, விளையாட்டு, ஓட்டம் என எதாவது ஒருவகையில் உடலுக்கு தொடர்ந்து வேலை கொடுத்தாலே பிரச்னைகள் வராது, வந்தாலும் உடற்பயிற்சிகளிலேயே சரி செய்துகொள்ளலாம்.

பலரும் இந்த வலிகளைக் கண்டு கொள்வதில்லையே. அவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

எப்படி மூட்டில் சவ்வு என்கிறோமோ இங்கும் அதேபோன்ற சவ்வுதான் வேலை செய்கின்றது. ஆனால் இங்கே சவ்வு அழுத்தினால் நரம்புகளையும்சேர்த்து சேதப்படுத்தும். முதுகில், கழுத்தில் துவங்கும் பிரச்னை கை , கால்கள், முன்பக்க விலா எலும்புகள் என இணைப்புகளையும் சேர்த்து பிரச்னைகளுக்கு ஆளாக்கும்.

இதற்கு டி3 விட்டமின் சத்து மாத்திரைகள், உடற்பயிற்சி, பிஸியோதெரபி, உடல் அமைப்பில், அமர்வதில் மாற்றம் என சிகிச்சைகள் செய்யலாம். இவைகளில் எல்லாம் தீரவில்லை எனில் எலும்பு இணைப்பு அறுவை சிகிச்சை, அதாவது விலகிய அல்லது சவ்வு தேய்ந்த எலும்புகளை சரியாகப் பொருத்தி பிளேட் வைத்து செய்யப்படும் சிகிச்சை. இதில் நல்ல முன்னேற்றமும் நிவாரணமும் கிடைக்கும்.

Dr. Nandakumar Sundaram
(MBBS.,F.R.C.S.,M.Sc.
(Ortho-London)
Senior Consultant and Head of the Dept.- Orthopedics Trauma and Joint Replacement)
Fortis Malar Hospital, Adyar
For Appointments : 9962599933
Email : contactus.malar@fortishealthcare.com