தேர்தல் 2019-பெண்ணுக்கு வாக்குரிமை!



பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடத் தக்கவர்கள் என்பதும், பெண்கள் வீட்டுப் பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருந்து வந்திருக்கிறது.  பெண்களுக்கு பொது வாழ்வில் பங்கு மறுக்கப்பட்டது. தேர்தலில் வாக்குரிமையும் விதிவிலக்கல்ல.பிரிட்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட சென்ற நூற்றாண்டின் இடையில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின.

ஆனால் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலிலேயே (1951 - 52) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்பது பெருமைப்படத்தக்கது.
வாக்களிப்பவர்களுக்கு வயது என்பது ஒரு முக்கியத் தகுதி. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முதிர்ச்சி பெற்றவர்களே நன்கு முடிவெடுக்க இயலும் என்பதால் வயது ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உலகளவில் 18 வயது என்பது முதிர்ச்சியுற்ற வயதாகக் கருதப்படுவதால் பல நாடுகளிலும் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. இந்தியாவில், முதலில் 21 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர், 1988ம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி ஆட்சியில் இந்த உரிமை வழங்கப்பட்டது.  

நெட்டிசன்