சிங்கில் எதைக் கொட்டக் கூடாது?1. முட்டைகளின் ஓடுகள். எவ்வளவுதான் நொறுக்கிப் போட்டிருந்தாலும் அவை சாக்கடைகளை அடைத்துக் கொள்ளும்.

2. பாத்திரத்தில் இருந்த எண்ணெய். மீன் வறுத்தோ, அப்பளம் சுட்டோ மீந்துபோன எண்ணெயை சிங்கில் ஊற்றிக் கழுவிவிடுவது சுலபம். ஆனால், அந்த எண்ணெய் கழிவுக் குழாய்களில் படிந்து, படிந்து, சாக்கடைக் குழாய்களிலும் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்.

3. சப்பாத்திக்கு பிசைந்த மாவு. இதுவும் சாக்கடைக் குழாய்களை அடைத்துக்கொள்ளும். வீணானதை சுரண்டி எடுத்து குப்பையில் போடுவதே சரியான வழி. பாஸ்டா, அரிசி மாவு ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

4. பேக்கேஜ்களில் இருந்த சின்னச் சின்ன காகிதத் துணுக்குகள். டிப்-டீ பைகள். அடைப்பை ஏற்படுத்தும்.

5. டீ / காபித்தூள் பவுடர். வடித்து விட்ட பின் மீந்து போன டீத்தூள். இவை சாக்கடையின் அடியில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்.

6. சுத்தப்படுத்தும் ஆயில்கள் / அமிலங்கள்.

7. டிஷ்யூ தாள்கள். அட... எவ்வளவு ஈசியா ஊறிப்போயிடுது என்று சிங்கில், டாய்லெட் ஃப்ளஷ்களில் போடுவது தவறு. இதுவும் சாக்கடைகளை அடைக்கும்.

8. பெயின்ட். நீருடன் ஒருபோதும் கரையாத, கலக்காத தன்மை பெயின்ட்டுக்கு உண்டு. இவை கழிவுப் பாதைகளில் ஒட்டிக் கொண்டு அடைப்பை
ஏற்படுத்தும்.