சத்து டானிக்!ரீடர்ஸ் வாய்ஸ்

‘டுலெட்’ படக்குழுவினருடன் ஒரு ‘கெட் டுகெதர்’ பார்ட்டியாக மகிழ வைத்துவிட்டது அவர்களின் பேட்டிக் கட்டுரை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; மயிலை.கோபி, அசோக் நகர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஆர்.ஜெ.சி, சென்னை.

மனித இரத்தத்தால் நனைகிற பூமியின் பகுதிகள் விரைவில் காய்ந்து விடுவதில்லை என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது ‘நிலமெல்லாம் இரத்தம்’.
- சந்திரமதி, சென்னை; பிரேமா குரு, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; இலக்சித், மடிப்பாக்கம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; நஞ்சையன், பொள்ளாச்சி; சங்கரன், சென்னை; ஆத்மநாதன், ஆற்காடு; புகழ்மதி, ஆதம்பாக்கம்.
 
‘‘திருமண வயதை எட்டாத பெண் குழந்தைகளை மணக்கும் பலர் வயதானவர்கள்...’’ என்பதைப் படிக்கும்போதே மனம் பதறியது. அதுவும் 17% குழந்தைத் திருமணங்கள் தமிழகத்தில்தான் நடக்கிறது என்ற புள்ளி விவரம் திடுக்கிட வைத்தது.
- பி.சாந்தா, மதுரை; சரண்சுதாகர், வேளச்சேரி; ஜெயசந்திர பாபு, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பிரேமா குரு, சென்னை; மியாவ்சின், கே.கே.நகர்; காந்தி லெனின், திருச்சி; பிரேமா பாபு, சென்னை.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குருவி தலையில் பனங்காயை வைத்த கதைதான். குழந்தைகள் தாங்கமாட்டார்கள்.
- பிரேமா குரு, சென்னை; அ.யாழினி பர்வதம், சென்னை; பி.சாந்தா, மதுரை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மாளவிகா ரமேஷ், சென்னை.

சர்பத் கடையிலிருந்து சக்சஸ் இயக்குநராக அவதாரம் எடுத்த ஏ.வெங்கடேஷின் ‘லைஃப் டிராவல்’ - சத்து டானிக்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, குமார், சென்னை, சண்முகம், மதுரை.

கொஞ்சம் முயற்சி செய்தாலே போதும் இயற்கையை மீட்டெடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது கோஸ்டாரிக்கா தோட்டம்.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; மலர்விழி, சென்னை; ஜெகதீஷ், மதுரை; அ.யாழினி பர்வதம், சென்னை.

‘ஆர்கானிக்’ என மாடர்னாக பெயர் சூட்டினாலும் பாரம்பரியத்தை மீட்கும் யுக்திக்கு ஒரு சபாஷ்.
- மனோகர், மேட்டுப்பாளையம்; ஜெயசந்திரபாபு, சென்னை; பிரேமா, சென்னை; மலர்க்கொடி, திருவாரூர்.