COFFEE TABLE
ராஷி ஹேப்பி!
 ‘ஜெயம்’ ரவியுடன் நடித்த ‘அடங்கமறு’ ஹிட்டுக்குப் பிறகு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. விஷால், விஜய்சேதுபதி, சித்தார்த் என பரபரக்கும் ராஷி, சமீபத்தில் படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரி சென்றுவந்திருக்கிறார். ‘‘A place that fills your heart with joy.. where each wall has a story to tell! I love Pondicherry...’’ என பூரிக்கிறது பொண்ணு! அந்த ஹேப்பி மொமன்ட்டை க்ளிக்கி, இன்ஸ்டாவில் தட்டிவிட லட்சம் லைக்கு களைத் தாண்டிவிட்டார் ராஷி.
நியூ ஸ்மார்ட் வாட்ச்
‘ஆப்பிளு’க்குப் பிறகு அதிகளவில் ஸ்மார்ட் வாட்ச்சுகளை விற்பனை செய்கின்ற நிறுவனம் ‘ஃபிட்பிட்’. 2018ல் மட்டும் 55 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்சுகளை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. குழந்தை களைக் கவரும் விதமாக ஃபிட்னஸ் டிராக்கர் வசதியுடன் ‘வெர்சா லைட்’ என்ற புதிய மாடலை அறிமுகப் படுத்தியுள்ளது ‘ஃபிட்பிட்’. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ. 11,200.
ஐஸ் லிசா
கனடாவில் ஹாட் டாக்கே ராபர்ட் கிரீன்ஃபீல்டு என்ற இளைஞர் வரைந்த ஓவியம்தான். ராபர்ட்டின் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு நீரோடை குளிரால் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிட்டது. அந்த பனிக்கட்டியின் மீதுதான் அவர் ஓவியம் வரைந்திருக்கிறார். ஓவியம் வரைவதை அப்படியே வீடியோவாக்கி இணையத்தில் தட்டிவிட, ஒரே நாளில் வைரலாகிவிட்டார் ராபர்ட். அவர் வரைந்தது லியோனார்டோ டாவின்சியின் உலகப்புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவை!
அமெரிக்காவில் ஆப்தே
பாலிவுட் வெப்சீரிஸில் ஆர்வம் காட்டி வரும் ராதிகா ஆப்தே, ‘த வெட்டிங் கெஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அது அமெரிக்காவில் மட்டும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதன் புரொமோஷனுக்காக நியூயார்க் சென்ற ராதி, ‘‘அந்தப் படத்துல ஒர்க் பண்ணினது பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்...’’ என்கிறார் சிலிர்ப்பாக! கூடவே, ‘த வெட்டிங் கெஸ்ட்’ இயக்குநருடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட, லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறார் ஆப்தே!
|